கர்ப்பிணிகள் இளநீர் குடிப்பது நல்லதா? ..!!
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் பொதுமான அளவு தண்ணீர் குடிப்பதை போல தினமும் 1-2 டம்ளர் இளநீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.ஆனால் கேன்களில் அடைக்கப்பட்ட கெமிக்கல்கள் நிறைந்த இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணிகள் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்க ர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாவதாலும், இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும், அதை தடுக்க இளநீர் உதவுகிறது.
இளநீரானது கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் கர்ப்பப்பை விரிவதால் ஏற்படும் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் உண்டாகும் சோர்வை போக்கி, உடலின் மெட்டபாலிசத்தின் அளவு மற்றும் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கிறது.கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் காய்ச்சல், வாந்தி, உடல் வறட்சி போன்ற பிரச்சனையை தடுத்து, பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் தழும்புகளை மறைக்க உதவுகிறது.
இளநீரில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை சீராக்கி, கால்களில் வரும் வெடிப்புகளில் இருந்து விடுபட உதவுகிறது.
Average Rating