முகத்தில் பள்ளம் மேடு உள்ளதா? மறைக்கும் வழிகள்..!!
முகத்தில் பள்ளம், மேடுகள் அதிகமாக இருந்தால், அழுக்குகள் அதிகமாக சேர்ந்து அவை கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை அதிகமாக்கி முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.முகத்தில் பள்ளம் மேடுகளை போக்குவது எப்படி?
வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டரை கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
நன்கு கனிந்த பப்பாளி பழத்தை அரைத்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
தக்காளியை நன்கு அரைத்து அதை முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
தேனுடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.
Average Rating