நீங்கள் சுடச்சுட சாப்பிட விரும்புபவரா? அப்ப இத படிங்க….!!

Read Time:1 Minute, 52 Second

நம்மில் பலருக்கு, சுடச்சுட, ஆவி பறக்க சாப்பிடத்தான் விருப்பம். ஆனால், இது நல்லதா?

கொதிக்கிற சூட்டில் உள்ளே தள்ளுகிறோமே, இதனால் ஆபத்து எதுவும் உண்டா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

உண்மையில், ஆவி பறக்கச் சாப்பிடுவது சரியல்ல, அதேபோல ஆறிப் போன உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் சரியல்ல. மிதமான சூட்டில் சாப்பிடுவதுதான் நல்லது.

காரணம், அதிகச் சூட்டில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டால், அது நமது குடலுக்கு உணவுகளை உணவுப்பாதை வழியாக எடுத்து செல்லும் மியூகோசா என்ற படலத்தை பாதிப்படையச் செய்கிறது.

இந்தப் படலம்தான், நமது உடம்பின் உணவுக்குழாயில் தொடங்கி குடல் வரை பாதுகாப்பு அரணாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் அன்றாடம் சூடாக உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், மியூகோசா படலத்தை பாதிப்படையச் செய்து, நாளடைவில் அல்சர் எனப்படும் குடல்புண்ணை ஏற்படுத்தலாம்.

மேலும் இந்தப் பிரச்சினையை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால், செரிமானப் பிரச்சினை, வாய்ப்புண் ஏற்படுவதுடன், அது புற்றுநோயாக மாறுவதற்குக் கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே நாம் தினமும் உணவு சாப்பிடும்போது, மிதமான இளஞ்சூட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானா சேர்ந்த கூட்டம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தம்! படக்குழுவில் வாக்குவாதம்..!!
Next post காதல் கணவரை அதிரடியாக தூக்கி எறிந்த நடிகைகள்..!! (வீடியோ)