மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா..!!

Read Time:1 Minute, 37 Second

கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இப்படத்தை தொடர்ந்து ‘ராஜபார்வை’ படத்தில் கமலுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ‘ஆட்ட கலசம்’ படத்தின் மூலம் நாயகியானார். அதற்கு பிறகு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘மதுமதி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.

அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது மகள் 10வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? உள் அலங்காரத்தின் செலவு மட்டும் இவ்வளவா?..!!
Next post 4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி..!!