By 14 October 2017 0 Comments

எண்ணற்ற நன்மை தரும் எள்..!!

5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும். ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.

எள்ளில் உள்ள சத்துக்கள் :

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்கிறது
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது

இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.

ஏள், வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணமாக கொண்டு நீராவியில் வேக வைக்கும் கொழுக்கட்மை அல்லது மோதகம் போன்றவற்றை உண்ணலாம்.

சாதத்தில் எள்ளை பொடி செய்து சேர்த்து உண்ணுதல் : எள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எள்ளு பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட உபயோகிக்கலாம்.

எள்ளின் மருத்துவ பயன்கள்:

வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 µp ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அதில் 25 சதவித தேவையை பூர்த்தி செய்கிறது.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.

எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

எள்ளில் Phytpsterol என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. அதாவது 400 – 413 மி.கி அளவு 100 கிராம் எள்ளில் உள்ளது. இது மற்ற எந்த விதைகள் கொட்டைகளின் அளவை விட அதிகம். இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது.

100 கிராம் எள் 573 கலோரி சக்தியை கொடுக்கிறது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச் சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam