கர்ப்ப காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம்..!!

Read Time:2 Minute, 38 Second

கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டுமே ஓரளவு இயல்பானவைதான். கர்ப்ப காலத்தின்போது தாயின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், வயிற்றில் உள்ள கருவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வயிற்றுப்போக்கு திடீரென ஏற்படுகிறது என்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஏதேனும் பிரச்சனை இருக்கக்கூடும்.

அசுத்தமான தண்ணீரை குடிக்கும்போதும் அதில் சமைக்கும்போதும் அதில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணியிர்களாலும் பிரச்சனை வந்திருக்கலாம். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே எப்போதும் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துங்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு ஏற்படும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகி அவசியப்பட்டால் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளுங்கள்.

உடலுக்கு குளுக்கோஸை வழங்கும் இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் சோர்வடையும்போது அது குழந்தையையும் சோர்வாக்கும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பிணிகள் வேலையே செய்யக்கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. உண்மையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே அலைச்சல், கடின உடல் உழைப்பு, பயணம் போன்றவை இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். சோர்வாக இருந்தால் சிறிது ஓய்வு எடுத்துவிட்டுச் செய்யலாம். தினசரி ஸ்ட்ரெச்சிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்பிணிகள் வேலையே செய்யக் கூடாது என்பது தவறான கருத்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?…!!
Next post அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்..!!