உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?..!!

Read Time:2 Minute, 2 Second

பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசையை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான `நிமிர்’ படத்தில் நடித்து வருகிறார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் மித்ரனின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி. இப்படத்திற்கு ‘7 கிணறுகள்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும், ‘விக்ரம் வேதா’ படத்தின் நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத், உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேடையில் வையாபுரி, பிந்து மாதவி மோதல்… கோபத்தில் வெளியேறிய பிந்துமாதவி!.. நடந்தது என்ன?..!! ( வீடியோ)
Next post உலகின் அடுத்த புரூஸ் லீ இவர்தான் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த வீடியோ..!!