‘ஸ்வீட் கார்ன்’… இனிப்பான செய்திகள்..!!

Read Time:3 Minute, 39 Second

நொறுக்குத் தீனி பிரியர்கள் பலருக்கு, இப்பழக்கம் நம் ஆரோக்கியத்தை நொறுக்கி விடுமோ என்ற பயம் இருக்கும்.

அப்படி பயம் ஏதும் இல்லாமல் சாப்பிடக்கூடிய ‘ஸ்நாக்ஸ்’, ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்புச் சோளம்.

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண் பார்வை, சருமத்துக்கு நலம் பயக்கக்கூடியவை.

இவை தவிர மேலும் பல ஆரோக்கிய அனுகூலங்களை ஸ்வீட் கார்ன் வழங்குகிறது. அவை பற்றிப் பார்ப்போம்…

ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, கார்ன் ஆயிலில் இருக்கும் அதிகப்படியான ஒமேகா 6 பேட்டி ஆசிட், நம் மூளையின் செயல்பாடுகளுக்கும் உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது.

எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஸ்வீட் கார்ன் சிறந்த உணவாகும். 100 கிராம் ஸ்வீட் கார்னில் 86 கிராம் கலோரி இருக்கிறது. எனவே இதை தொடர்ந்து சாப்பிடலாம்.

ஸ்வீட் கார்னில் வைட்டமின் ஏ, பி, சி, இ இருக்கிறது. அதேபோல மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. நம் உடலின் செல் வளர்ச்சிக்கு இவை மிகவும் பயனளிக்க கூடியவை.

ஸ்வீட் கார்னில் இருக்கும் போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி 12 ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும். உடலில் போலிக் ஆசிட் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாகிடும்.

ஸ்வீட் கார்ன் கொலஸ்ட்ராலை குறைக்க உதவிடும். குறிப்பாக மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதால் இதய நோய் தொடர்பான ஆபத்துகளைத் தவிர்க்க ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு வரலாம்.

அதேபோல, ஸ்வீட் கார்னில் இருக்கும் வைட்டமின் பி9 இதயத்தில் உள்ள ரத்த நாளங்களைப் பாதுகாக்கிறது, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

ஸ்வீட் கார்ன், நார்ச்சத்து மிக்கது. இது செரிமானத்துக்குப் பெரிதும் உதவிடும். சர்க்கரை நோய், சிறுநீரகம் தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய் வராமல் தடுத்திடும். ரத்தம் மற்றும் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சரும பொலிவுக்குக் காரணமாகும்.

முதுமையைத் தடுக்கக் கூடிய முக்கியமான உணவாகும் ஸ்வீட் கார்ன். எனவே இதைச் சாப்பிட்டு வருபவர்கள் தங்கள் இளமைப் பொலிவைக் காக்கலாம். கார்ன் ஆயில் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்துவந்தால் முகச் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கலா திருகதைகளாக உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்..!!
Next post மருமகளை கொலை செய்த மாமனார்!… முகம்சுழிக்க வைக்கும் காரணம்..!!