விலைமாதுவாக நடிக்கும் சதா..!!

Read Time:2 Minute, 27 Second

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் பட உலகில் அழுத்தமாக கால் பதிக்கிறார்.

தற்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்கள். அது போன்று ‘டார்ச்லைட்’ படத்தில் நாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் சதா நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல்மஜித் இயக்குகிறார்.

‘டார்ச்லைட்’ படத்தில் சதாவுக்கு விலைமாது வேடம். இது பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜித்…

“பாலியல் தொழிலாளி பற்றிய பல கதைகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த கதை அது போன்றது அல்ல. இந்த தொழிலில் ஈடுபடும் சிலரை சந்தித்து, அவர்கள் பின்னணி குறித்து கேட்டேன். அப்போது எந்த சூழ்நிலையால் இந்த தொழிலில் இறங்க நேர்ந்தது என்பதை கூறினார்கள். சிலர் கணவரை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் இதை செய்கிறார்கள். வியாபார நோக்கத்தில் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். சதாவின் விலைமாது வேடத்திற்கு இந்த படத்தில் முக்கியமான பின்னணி உள்ளது. கதையை நான் அவரிடம் சொன்ன போது கேட்டு கண்ணீர் விட்டார்.

இந்த படம் சதாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அவரது கதாபாத்திரம் பேசப்படும். திரை உலகில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி..!!
Next post பொருத்து வீட்டுத் திட்டத்தில் மறைமுக நிகழ்ச்சிநிரல்..!! (கட்டுரை)