By 19 October 2017 0 Comments

என் முதல் காதல் அனுபவம். முதலிரவில் புரிய வைத்த கணவர்..!!

நான் முதல் முறை காதலில் விழுந்த போது வயது 16. 16 வயதென்பது கானலுக்கும், காதலுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் பருவம். அப்போது நான் உயர் பள்ளி படிப்பு பயின்று கொண்டிருந்தேன். எனது பள்ளியில் நான் கொஞ்சம் பிரபலமான பெண். மிகவும் சிரத்தையான பெண் என்பதால் அனைவரும் என்னை சந்திக்க விரும்புவர். அப்போது தான் நான் அவனை கண்டேன். நான் கண்டத்திலேயே மிகவும் அதிகம் வெட்கப்படும் ஆண் அவன். அந்த வெட்கம் தான் என்னை ஈர்த்தது. எப்படியோ ஒருவழியாக அவன் என்னை காதலிப்பதாக கூறி முடித்தான். அந்த முயற்சி தான் அவனிடம் எனக்கு மிகவும் பிடித்தது

அனைத்திற்கும் மேலாக… அனைத்திற்கும் மேலாக அவனை நான் விரும்பினேன். அவனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆனால், அதன் பின் நான் எனது சுதந்திரத்தை இழக்க துவங்கினேன். நான் 24×7 அவனுடன் தான் இருக்க வேண்டும். இல்லையேல் அவனுக்கு கோபம் வரும்.

பெற்றோர்! நான் எனது தோழிகளுடன் கூட பேச நேரம் இருக்காது. ஏனெனில், அவன் அனைவரும் மத்தியிலும் என்னுடன் பேச தயங்குவான். இந்த சிறு வயதில் உங்களுக்குள் என்ன காதல் என பெற்றோர் திட்டினர். ஆனால், நான் அப்போதும் அவனை விட்டுக் கொடுக்க வில்லை. அதற்கும் மேல் நான் அவனை அதிகமாக நேசிக்க துவங்கினேன்.

உறவு… அவனுடன் உடலுறவில் ஈடுபட அழைத்தான். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நான் ஒரு இஸ்லாம் பெண், எங்கள் நம்பிக்கைக்கு எதிரான செயல் இது. திருமணத்திற்கு முன்னர் இது தவறு என்றேன். அந்த நேரம் தான் எங்கள் படிப்பு முடிந்தது. நாங்கள் இருவரும் இருவேறு நகரங்களில் மேற்படிப்பு பயில பிரிந்தோம். ஒவ்வொரு மாதமும் என்னை காண வந்துவிடுவான்.

ஓகே வா… எனக்காக அவன் வந்து காத்திருப்பதை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் அவனை நோக்கி சென்று ஹாய் சொன்ன மறுநிமிடம், இம்முறையாவது ஓகே வா என படுக்கைக்கு அழைப்பான். நான் ஒவ்வொரு முறையும் மறுப்பேன். செக்ஸ் வேண்டாம் என வேறு செயல்களை செய்ய கூறினான். இதற்கு பெயர் காதலல்ல என கூறினேன். நான் உடைந்து போனேன், மிகவும் அழுதேன்.

ஒன்றரை வருடம்… ஒன்றரை வருடங்கள் கடந்தது. எங்கள் வீட்டில் நிச்சயித்த திருமணம் ஏற்பாடு செய்தனர். என்னால் அவரை காதலிக்க முடியுமா என தெரியவில்லை. உள்ளுக்குள் உணர்ச்சியற்ற பொருளாய் இருந்தேன். எனது கணவர் என்னைவிட எட்டு வயது மூத்தவர். எங்கள் நிச்சயதார்த்ததிற்கு முன்னர் ஒருமுறை மட்டும் தான் நாங்கள் பார்த்துக் கொண்டோம். பெரும்பாலும் அழைப்பேசியில் தான் பேசி இருக்கிறோம். மெல்ல, மெல்ல அவர் மேல் காதல் வந்தது.

சுதந்திரம்! அவன் எனக்கான இடத்தை கொடுத்தா. அவருடன் இருக்கும் போது நான் எனது தோழமை மற்றும் உறவுகளுடனும் நேரம் செலவழிக்கலாம். திருமணத்திற்கு பிறகும் விருப்பம் என்றால் நீ தொடர்ந்து படிக்கலாம் என கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, நானாக தயாராகும் வரை செக்ஸ் வேண்டாம். நான் உன்னை நிர்பந்தம் செய்ய மாட்டேன் என முதலிரவு அன்று வாக்குறுதி அளித்தார்.

இது தான் காதல்… எந்த வற்புறுத்தலும் இன்றி, தான் தரும் காதலுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வெளிபடுத்தும் காதல் தான் உண்மை காதல். எங்கள் இருவருக்கும் தனி சுதந்திரம் இருந்தது. தனி கனவுகள். ஒருவருக்கு ஒருவர் உபத்திரமாக அல்லாமல்., உறுதுணையாய் இருந்தோம். என கணவர் எனது காதலர் மட்டுமல்ல, எனது சிறந்த நண்பரும் கூட. எங்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் காதல் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒருவரை ஒருவர் அதிகமாக நேசிக்கிறோம். என்னை போலவே அனைவருக்கும் நிச்சயதார்த்த திருமணம் சந்தோஷமாக அமையுமா என்பது எனக்கு தெரியாது. அமைந்தால் சொர்கத்தை நீங்கள் உணரலாம்Post a Comment

Protected by WP Anti Spam