By 21 October 2017 0 Comments

கமல்ஹாசனின் `இந்தியன்-2′ படக்குழுவில் முக்கிய மாற்றம்?..!!

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்’. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2′ படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்குகிறது. தற்போது 2.0 படத்தில் பிசியாகி இருக்கும் ஷங்கர் 2.0 ரிலீசான பிறகு இந்தியன் 2 படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கமல் – ஷங்கர் மீண்டும் இணையும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் `இந்தியன்-2′ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.



Post a Comment

Protected by WP Anti Spam