கிரிக்கெட் தர வரிசை -3வது இடத்தில் இந்தியா

Read Time:2 Minute, 54 Second

Cricket,1.jpgஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 131 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 123 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இதுவரை 4வது இடத்தில் இருந்த இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி மொத்தம் 113 புள்ளிகள் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி 3வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து எதிரான ஒரு நாள் கிரிக்கொட் தொடர் 22 என்ற கணக்கில் சமன் நிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி மொத்தம் 111 புள்ளிகள் பெற்று பின்னடைந்துவிட்டது.

நியூலாந்து 111 புள்ளிகள் பெற்று 5வது இடத்திலும், இலங்கை 107 புள்ளிகள் பெற்று 6வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 99 புள்ளிகள் பெற்று 7வது இடத்திலும், இங்கிலாந்து 99 புள்ளிகள் பெற்று 8வது இடத்திலும், ஜிம்பாப்வே 35 புள்ளிகள் பெற்று 9வது இடத்திலும், வங்காளதேசம் 33 புள்ளிகள் பெற்று 10வது இடத்திலும் உள்ளன.

கில்கிறிஸ்ட் முதலிடம்:

பேட்டிங் தர வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் 809 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அதிரடி வீரர் டோனி 778 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், யுவராஜ் சிங்க 735 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும் உள்ளனர்.

முதலிடத்தில் பெல்லாக்:

பந்து வீச்சு தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் பொல்லாக் 858 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இர்பான் பதான் 713 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 686 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்:

சிறந்த ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்கா வீரர் பொல்லாக் 462 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் பதான் 361 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.

Cricket,1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-
Next post தீவிரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கவர்னர் பலி