குழந்தைகளுக்கு உணவு இடைவெளி தேவை..!!

Read Time:4 Minute, 55 Second

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. எந்த உணவை, எந்த அளவில் கொடுக்கவேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரியவில்லை. குழந்தைகள் நிறைய சாப்பிட வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் ஆர்வமாக இருக்கிறது. குழந்தைகள் போதும்.. போதும் என்று கூறினாலும் விடாமல் அதிகப்படியான உணவினை பெற்றோர்கள் திணிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் குண்டாகிவிடுவார்கள். அவர்கள் செயல்திறன் பிற்காலத்தில் பாதிக்குமாம்.

குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் சின்னச்சின்ன தவறுகள்:

1. நொறுக்குத்தீனி..!

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்கிரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களது இரவு உணவுத்தேவையை குறைத்துவிடும். அதற்காக மாலை நேர நொறுக்குத்தீனி வேண்டாம் என்பதில்லை. உணவுகளுக்கு இடையில் போதிய உணவு இடைவெளி வேண்டும். நொறுக்குத்தீனி உணவுகளை குறைந்த அளவே வழங்கவேண்டும். அதில் வறுத்தது பொரித்ததை தவிர்க்கவேண்டும்.

10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கலோரிகளே போதுமானது. அதனால் உணவையும், நொறுக்குத்தீனியையும் அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவின் அளவு அதிகரித்துவிட்டால், மெட்டபாலிசம் குறைந்து செரிமானப்பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகள் குண்டாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

2. அளவின் அவசியம்

பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒரு வேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு உணவு தேவை என்பது தெரிவதில்லை. நன்றாக சாப்பிடவேண்டும் என்ற நினைப்பில் உணவைத் திணிக்கிறார்கள். அவர்களுக்கு தேவைக்கு அதிகமான உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பதுடன், ஆரோக்கிய பிரச்சினைகளும் தலைதூக்கும். அதிகமாக உணவு உண்ணும் குழந்தைகள் செயல்திறன் குறைந்தவர்களாகிவிடுவார்கள். வயதுக்கு தக்கபடி குழந்தைக்கு எவ்வளவு உணவு கொடுக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொடுங்கள். குழந்தைகளை மைதான விளையாட்டுகளை விளையாடவும் அனுமதியுங்கள்.

3. உணவு நேர இடைவெளி

குழந்தைகளுக்கான உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும். சரியான இடைவெளிவிட்டு உணவு வழங்கினால்தான் நன்றாக ஜீரணமாகும். நன்றாக ஜீரணமாகுவதுதான் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

4. ஆரோக்கிய உணவுகள்

வீட்டில் சமைக்கப்படாத எந்த உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவு களில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை. இல்லையேல் சிறுவயதிலேயே பல உடல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

5. நேரத்திற்கு உணவு

நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அதேசமயம் உணவு நேரத்திற்கு இடையில் சிற்றுண்டி கொடுக்க நேரிட்டால் அது விரைவில் செரிமானமாகக்கூடியதாக இருக்கவேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கவேண்டும். கண்ட நேரத்தில் எல்லாம் உணவு கொடுப்பது அவர் களது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை..!!
Next post யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை: ரஜினி..!!