கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் கவுனி அரிசி..!!

Read Time:0 Second

<நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. இதன் சிறப்பை புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள். கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கருப்பு நிறம்தான். கருப்பு நிறத்துக்கு காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைக்கோஸ், மாதுளை, கருப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது. இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து ஆன்டிஆக்சிடன்ட் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள், வாயு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை தக்க வைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்..!!
Next post உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!