தூக்கம் உங்கள் கண்களைத் தழுவவில்லையா?..!!

Read Time:2 Minute, 51 Second

இயல்பான விஷயங்கள்கூட அவை இல்லாதபோதுதான் அவற்றின் அருமை தெரிகிறது.

அப்படிப்பட்ட ஒன்றுதான், தூக்கம். நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் தற்போது பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். போதிய தூக்கம் இல்லாமல் போவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

தானாகத் தேடிக்கொள்ளும் தூக்கமின்மை ஒரு வகை. படிப்பு, வேலை என்று கூறிக்கொண்டு நீண்டநேரம் விழித்திருப்பதால் போதிய தூக்கம் இல்லாதவர்கள் இந்த வகையினர்.

தேடாமலே வந்து அவதிப்படுத்தும் தூக்கமின்மை மற்றொரு வகை. படுக்கையில் எவ்வளவு நேரம்தான் கிடந்தாலும் தூக்கம் வராதவர்கள் இந்த வகையினர்.

காரணம் எதுவாக இருந்தாலும், போதிய தூக்கம் இல்லாவிட்டால் உடல் சோர்வாக இருக்கும். எளிதில் எரிச்சல் ஏற்படும், வேலைகளில் கவனத்தைச் செலுத்த முடியாது, செயல்திறன் குறைந்துவிடும்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக தூக்கமில்லாதவர்களுக்கு இதயப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். வாழ்க்கை நெருக்கடி மிக்கதாக மாறிவிடும்.

தூக்கமின்மைக்கும் பசிக்கும்கூட தொடர்பு இருக்கிறது. அடிக்கடி பசிப்பது போல இருக்கும். எதையாவது சாப்பிட அல்லது பருகத் தோன்றும். இப்படி கூடுதல் கலோரிகள் சேர்வதால் எடை அதிகரிக்கும்.

தூக்கப் பிரச்சினை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகம். தூக்கமின்மையால் தூக்க சுவாச நிறுத்தம் ஏற்படுவதே இதற்குக் காரணம்.

இதே தூக்க சுவாச நிறுத்தம் காரணமாக இதய நோய்கள் ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம், இதயம் வேகமாகத் துடித்தல், இதயத் துடிப்பின் சீர் மாறுபடுவது இப்படி தூக்கமின்மையால் பல தொந்தரவுகள் வரிசைகட்டி வரும். எனவே தினமும் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து போதுமான நேரம் உறங்குங்கள்.

தூக்கப் பிரச்சினைக்கு உங்களால் சுயமாகத் தீர்வுகாண முடியவில்லை என்றால், மருத்துவரை அணுகி உரிய நிவாரணம் பெறுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் பிக்பாஸ் வையாபுரியிடம் இதை கேட்டு அடம்பிடித்தாராம்! சுவாரசியமான தகவல்..!!
Next post அரசியல் பேச்சுகளுக்கு பிறகு களத்தில் குதித்த கமல்! வைராலகும் காணொளி..!!