ஐஸ்வர்யாவின் ஆனந்தத்திற்கு காரணம் என்ன?..!!
மகள் ஆரத்யாவை கவனித்துக்கொள்ள தன் தாய் இனிமேல் தன்னுடன் இருக்கப்போவதை நினைத்து, நடிகை ஐஸ்வர்யாராய் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.ஐஸ்வர்யாவின் தாய் பிருந்தா, கணவர் இறந்த பின்னரும் கணவருடன் வசித்த அடுக்குமாடி வீட்டிலேயே தான் குடியிருந்து வந்தார்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா தங்களுடன் வந்திருக்கும்படி அழைத்தும் அவர் செல்லவில்லை.ஆனால் கடந்த வாரம் பிருந்தா குடியிருந்த அடுக்குமாடி கட்டிடம் தீ பிடித்தது. இதனால் பதற்றமடைந்த ஐஸ்வர்யா, உடனடியாக தாயை பார்க்க சென்றிருந்தார். அவருடன் கணவர் அபிஷேக் பச்சன் புறப்பட்டுள்ளார்.
அங்கு சென்று தாயை பார்த்து சுகம் கேட்டதும். அபிஷேக் பச்சன் பிருந்தாவை நோக்கி, நீங்கள் இனி எந்த சந்தர்ப்பத்திலும் இங்கிருக்க வேண்டாம் எங்களுடன் வாருங்கள் என கண்டிப்பாக கூறியுள்ளார்.
அதற்கு ஒப்புக்கொண்ட பிருந்தா, அவர்களுடன் சேர்ந்திருக்க ஒப்புக்கொண்டதால், ஐஸ்வர்யா மிக்க சந்தோசத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.