By 30 October 2017 0 Comments

மார்பகத்தில் சேரும் கொழுப்பை கரைப்பது எப்படி? எளிய வழி இதோ..!!

உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணத்தினால் வயிறு, இடுப்பு மார்பு, தொடை ஆகிய பகுதிகளில் கொழுப்புகள் தேங்கி, வயதுக்கு மீறிய உடல் பருமன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.மார்பகத்தில் சேரும் கொழுப்பை கரைப்பது எப்படி?

தினமும் இஞ்சிச் சாறு குடித்து வந்தாலோ அல்லது தினமும் சாப்பிடும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டாலோ மார்பகக் கொழுப்பை கரைக்கலாம்.

ஆளி விதைகளை ஊறவைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு கரைவதோடு, சிறுநீரகக் கோளாறு மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் வராது.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தாது நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது. எனவே தினசரி உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வது நல்லது.

முட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து நிறைந்தும் உள்ளது. அதனால் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக் கொள்வதால் நல்ல பலனை பெறலாம்.

மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் மீன் எண்ணெய், நம் உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

வெந்தயத்தை இரவிலே நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, கொலஸ்ட்ரால், செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கொழுப்பை எளிதில் கரைக்கலாம்.

பச்சை நிறமுள்ள காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகாடோ, வெண்டைக்காய் ஆகியவற்றை அதிகமாக தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

உணவுகளை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, கொழுப்புமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது, அதிக சர்க்கரை மற்றும் உப்பு, குளிர்பானங்கள், மதுப்பழக்கம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, தினமும் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.



Post a Comment

Protected by WP Anti Spam