By 31 October 2017 0 Comments

குடல் புற்றுநோய் தடுக்கும் முட்டைகோஸ்: எப்படி சாப்பிட வேண்டும்?..!!

புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை முட்டைக்கோஸ் முற்றிலும் தடுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முட்டைகோஸில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள், விட்டமின் B5, B6, B1, K மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

மேலும் இதில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகளும் உள்ளது.

முட்டைக்கோஸை எப்படி சாப்பிட வேண்டும்?முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வரலாம் அல்லது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்மைகள்மு

ட்டைக்கோஸில் உள்ள ரசாயன மூலக்கூறுகள், மார்பகம், தொண்டை, குடல் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு, அது உடலின் எடையை குறைக்க உதவுகிறது.இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்கி, சிவப்பு ரத்த செல்களின் உருவாக்கத்தை அதிகமாக்குகிறது.

முட்டைக்கோஸில் அதிகளவில் உள்ள விட்டமின்-K, அல்சீமர் மற்றும் நரம்பு நோய்களின் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது.

முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்னையை குணமாக்குகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam