`வேலைக்காரன்’ படக்குழுவில் இருந்து வெளியான 2 இன் 1 சர்ப்ரைஸ்..!!

Read Time:1 Minute, 51 Second

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ஙத நிலையில், அந்த பாடல் குறித்த சிறப்பம்சம் தற்போது வெளியாகி இருக்கிறது. இறைவா (இறைவா+உயிரே) என தொடங்கம் அந்த பாடல் வாழ்க்கை மற்றும் காதல் என இருவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் என்று அனிருத் கூறியிருக்கிறார்.

படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1 கிலோ எடையிலான 639 ஆணிகளை விழுங்கிய அதிசய மனிதர்..!!
Next post எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?..!! (கட்டுரை)