புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ)

Read Time:13 Minute, 36 Second

புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” சார்பில் நேற்றையதினம் (29.10.2017), புங்குடுதீவு அம்பலவாணர் கலைஅரங்கில் நடைபெற்ற “கௌரவிப்பு நிகழ்வானது”, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகத்தின்” தலைவி திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் தலைமையில், திருமதி.சாரதா கிருஷ்ணதாஸ் (வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர்) பிரதம விருந்தினராக கலந்து கொள்ள, மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

**விருந்தினர்கள்…

பேராசிரியர் திரு.கா.குகபாலன் (புவியியல்துறை பேராசிரியர், யாழ்ப்பாண பல்கலைக் கழகம்), திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (வேலணை பிரதேச மத்தியஸ்தர் சபை தவிசாளர் & புங். தாயகம் சமூக சேவை அகம் போஷகர்) திரு.வி.மதியுகன் (முகாமையாளர், கொமெர்ஷல் வங்கி, வேலணை) திருமதி.ஆனந்தி குமாரதாஸ் (முன்பள்ளி உதவிப் பணிப்பாளர், தீவகம்), திரு.ஜேம்ஸ் நேசன் (புங்.றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய முதல்வர்), திரு.வ.அபராஜ் (சுகாதார பரிசோதகர், புங்குடுதீவு), திரு.கு.சந்திரா (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர், புங்குடுதீவு), திரு.பி.சதீஷ் (தலைவர், புங்குடுதீவு உலக மையம்), திரு.யாக்கோப்பு அமரநாதன் (தலைவர், சமூக பொருளாதார அபிவிருத்தி சங்கம் புங்குடுதீவு), திரு.தம்பையா சுப்பையா (சமூக ஆர்வலர், புங்குடுதீவு), திருமதி.சுப்பிரமணியம் ஞானாம்பிகை (சமூக ஆர்வலர், கனடா), திருமதி.ஜெயகுமாரி சஸ்பாநிதி (ஆலோசகர், புங்.தாயகம் சமூக சேவை அகம், பிரான்ஸ்) ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

முதலில் அனைத்து விருந்தினர்களும், அம்பலவாணர் அரங்கு வாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்க்கப் பட்டதுடன், செபஜீவன் முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு விருந்தினர்கள் அனைவராலும் மங்கள விளக்கேற்றப் பட்டதுடன்,..

பிரம்மஸ்ரீ முரளிதர சர்மா (தெங்கம்திடல் வரசித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு), அருட்தந்தை செபமாலை செபஜீவன் (புங்குடுதீவு தூய சவேரியார் ஆலயம்) ஆகியோர் ஆசியுரை வழங்க, செல்விகள் கௌசி சஸ்பாநிதி (பிரான்ஸ்), மேகலா சஸ்பாநிதி (பிரான்ஸ்) ஆகியோர் தேவாரம் இசைக்க, “தாயகம்” சொக்கலிங்கம் அக்கெடமி மாணவிகளினால் கீதம் இசைக்க, “தாயகம் சமூக சேவை அகத்தின்” செயலாளர் செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு அவர்களின் வரவேற்புரை மற்றும் “தாயகம்” நடன மாணவிகளினால் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

**விருந்தினர்கள் உரை…

இதனைத் தொடர்ந்து “தாயகம் சமூக சேவை அகத்தின்” போஷகர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களின் தலைமை உரை, பிரதம விருந்தினர் திருமதி.சாரதா கிருஷ்ணதாஸ் (வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர்) அவர்கள் உட்பட அனைத்து விருந்தினர்களின் உரையுடன், பல்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

** “தாயகம்” ஆசிரியை கௌரவிப்பு..

இவற்றுக்கு மத்தியில், தாயகம் சமூக சேவை அகத்தின் “சொக்கலிங்கம் அக்கெடமி” ஆசிரியையும், “தாயகம் நடனப் பள்ளி” ஆசிரியையுமான செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா) அவர்கள் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்” சார்பில் கௌரவிக்கப்பட்டார்கள்.

இவருக்கு செல்விகள் கௌசி சஸ்பாநிதி (பிரான்ஸ்), மேகலா சஸ்பாநிதி (பிரான்ஸ்) ஆகியோர் பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து கௌரவித்ததுடன், “தாயகம்” அமைப்பின் சார்பிலான பரிசில்களையும் வழங்கினார்கள்.

அத்துடன் திருமதி.த.சுலோசனாம்பிகை தனிப்பட்ட ரீதியிலும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.

** “தாயகம்” பிரான்ஸ் ஆலோசகர் கௌரவிப்பு..

இதனைத் தொடர்ந்து, மேற்படி “தாயகம்” விழாவை மட்டுமல்ல, அம்பலவாணர் அரங்கு புனரமைப்புக்கு உதவியவர்களில் ஒருவர் என்ற ரீதியில், புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம் சார்பில், பேராசிரியர் திரு.குகபாலனின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமதி ஜெயகுமாரி சஸ்பாநிதி அவர்களை, திருமதி.சாரதா கிருஷ்ணதாஸ் (வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர்) அவர்கள் பொன்னாடை போர்க்க, திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள் மாலை அணிவித்துக் கௌரவித்தார்கள்.

** புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் கௌரவிப்பு…

இதனைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவி செல்வி. விஜயகுமாரசர்மா ஐஸ்வர்யா அவர்களுக்கு, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவப்படுத்தப் பட்டது.

இவரை புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில், திரு.சண்முகலிங்கம் மாஸ்ரர் முன்னிலையில், செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, திருமதி.த.சுலோசனாம்பிகை மாலை அணிவிக்க, ஒன்றியத்தின் சார்பிலும், தாயகத்தின் சார்பிலும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

இவருக்கான பணமுடிப்பை (இருபத்தையாயிரம் ரூபா) திரு.சண்முகலிங்கம் மாஸ்ரர் “சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் வழங்கிக் கௌரவித்தார்.

*** மாற்றுத் திறனாளிகள் கௌரவிப்பு…

இதனைத் தொடர்ந்து “மாற்றுத் திறனாளிகளுக்கான” கௌரவிப்பை “தாயகம் சமூக சேவை அகம்” சார்பில் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

திருமதி.சண்முகம் கனகமணி, திரு.அமலரெட்ணம் குயின்ரஸ், திரு.சண்முகம் கோபாலசிங்கம், திரு.இம்மானுவேல், திரு.சேர்ஸ்ஸில் ஆகியோருக்கான கௌரவிப்பை விருந்தினர்களைக் கொண்டு கௌரவிக்கப் பட்டது.

** “தாயகத் தலைவி கௌரவிப்பு..

இதனைத் தொடர்ந்து “தாயகம் சமூக சேவை அகத்தை” பலவழிகளிலும் முன்னேற்றகரமாக நடத்தி செல்லும், அதன் தலைவி திருமதி. த.சுலோசனாம்பிகை அவர்களை, “தாயகத்தின்” ஆலோசகர்களில் ஒருவரான, திருமதி.ஜெயகுமாரி சஸ்பாநிதி பொன்னாடை போர்க்க, திருமதி.கு.சுகந்தா பசுபதிப்பிள்ளை அவர்கள் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

** தாயகம் மாணவர்கள் கௌரவிப்பு..

அடுத்து தாயகம் அமைப்பின் “சொக்கலிங்கம் அக்கெடமி”யில் கல்வி கற்கும், அனைத்து மாணவ, மாணவிகளும் “தாயகம் சமூக சேவை அகத்தால்” கௌரவிக்கப் பட்டனர்.

மேற்படி மாணவர்களை விருந்தினர்கள் கௌரவித்ததுடன், இவர்களுக்கான கௌரவிப்புப் பரிசில்களை, “தாயகத்துடன்” இணைந்து, “செல்வி அன்ரி” என தம்மால் அழைக்கப்படும், அமரர் செல்வி. பரஞ்சோதி செல்வநிதி (சுவிஸ்) ஞாபகார்த்தமாக செல்வன் பன்னீர்செல்வன் சிந்துஜன், செல்வி. பன்னீர்செல்வன் சிந்துஜா ஆகியோர் சார்பில் திரு. சதாசிவம் பன்னீர்செல்வன்.(சுவிஸ்) வழங்கி வைத்தனர்.

**புங்குடுதீவின் அனைத்து முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு..

இதனைத் தொடர்ந்து, புங்குடுதீவின் அனைத்து முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நடைபெற்றது.

இதனை “அமரர் கந்தையா தனபாலன்” ஞாபகார்த்தமாக, அவரது மனைவி த.சுலோசனாம்பிகை, மகள் திருமதி.வாகினி ரவீந்திரன் (பிரான்ஸ்), மகன் திரு.திலீபன் தனபாலன் (சுவிஸ்) ஆகிய குடும்பத்தினரால் கௌரவப்படுத்தப் பட்டனர்.

இதனை திருமதி.சுப்பிரமணியம் ஞானாம்பிகை (சமூக ஆர்வலர், கனடா) உட்பட விருந்தினர்கள் பலரும் வழங்கிக் கௌரவித்தனர்.

**முதியோருக்கான கௌரவித்தல்..

அடுத்து “முதியோருக்கான கௌரவித்தல்” எனும் ரீதியில் “தாயகம்” அமைப்பின் சார்பில், திருமதி.தம்பிஐயா மணிமேகலை அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

இவருக்கு தாயகம் சமூக சேவை அகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திருமதி.ஜெயகுமாரி சஸ்பாநிதி (பிரான்ஸ்) அவர்கள் பொன்னாடை, மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

** பேராசிரியர் குகபாலன் கௌரவிப்பு..

இதனை அடுத்து “அம்பலவாணர் கலையரங்கை” விடாமுயற்சியில் ஐந்து மாதங்களுக்குள் அமைப்பதுக்கு அரும்பாடு பட்டவர்களில் ஒருவரான, பேராசிரியர் திரு.குகபாலன் அவர்கள், “தாயகம்” அமைப்பின் சார்பில் கௌரவிக்கப் பட்டார்.

இவரை “தாயகம்” அமைப்பின் தலைவி திருமதி.சுலோசனாம்பிகை முன்னிலையில், “தாயகம்” போஷகர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, புங். உலக மையத் தலைவர் திரு.பி.சதீஷ் மாலை அணிவித்துக் கௌரவித்தார்கள்.

**புங். தாயகம் நடனப் பள்ளி மாணவர்கள் கௌரவிப்பு…

இதனைத் தொடர்ந்து, இவ்விழாவை பல நடனங்கள் மூலம் சிறப்பித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற, “புங். தாயகம் நடனப் பள்ளி மாணவர்கள் அனைவரும், “தாயகம் சமூக சேவை அகத்தின்” சார்பில், கலந்து கொண்ட விருந்தினர்களால் கௌரவிக்கப் பட்டனர்.

**புங்குடுதீவு “தாயகம் பொது நூலகத்துக்கு”, புத்தகங்கள் அன்பளிப்பு..

இறுதியாக புங்குடுதீவு தாயகம் பொது நூலகத்துக்கு, அமரர்களான சொக்கலிங்கம் ஸ்ரீதேவிப்பிள்ளை (நாகேஷ்) குடும்பத்தினரால், வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதிப் புத்தகங்கள் யாவும் செல்விகள் கௌசி சஸ்பாநிதி (பிரான்ஸ்), மேகலா சஸ்பாநிதி (பிரான்ஸ்) ஆகியோர் வழங்கி வைக்க, “தாயகத்தின்” தலைவி திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை, செயலாளர் செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு, பொருளாளர் செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இவ்விழா சிறப்புற பலவழிகளிலும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றி.

இவ்வண்ணம்…
செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்.

30.10.2017

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது..!!
Next post சன்னி லியோனுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு ஆபாச நடிகை..!