பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்..!!

Read Time:5 Minute, 24 Second

பெண்கள் தங்கள் முகப்பொலிவை மேம்படுத்துவதிலும், அழகுபடுத்துவதிலும் தான் அலாதி இன்பம் அடைகின்றனர். பழங்காலம் தொட்டே பெணகள் ஏதேனும் ஓர் முறையில் முகப்பொலிவை கூட்டுவது, விழாக்களுக்கு செல்லும்போது அழகுபடுத்துவது என்றவாறு சிறப்புமிகு பணிகளை செய்து வந்தனர். முன்பு இல்லங்களில் செய்து வந்த அழகூட்டும் பணிகள் இன்று அழகு நிலையங்களில் அரங்கேற்றப்படுகின்றன.

முன்பு முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று கிராம வீதிகளில் கூட உள்ளன. அந்த அளவிற்கு அழகு நிலையங்களில் அணிவரிசை என்பது உலக புகழ்பெற்றது முதல் உள்ளூர் நிறுவனம் வரை என பெரிய வரிசையில் உள்ளன.

அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பேஷியல் என்பது உண்மையில் முகச்சருமங்களுக்கான சிகிச்சை முறை தான். முகச்சருமத்தினை சுத்தம் செய்வது, நீர்த்துவ தன்மையுடன் இருக்க செய்வது மற்றும் மோஷிக்க செய்வது போன்ற பணிகள் இணைந்ததே பேஷியல். இந்த பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.

பேஷியல் என்பது அடிப்படை சுத்தம் செய்வது, சாதாரண பேஷியல், பாரபின் பேஷியல், பயோலிப்ட் பேஷியல், முகப்பரு பேஷியல், அரோமோதெரபி பேஷியல், கோல்டு பேஷியல், பொலுஷன் எதிர்ப்பு பேஷியல், கோலகன் பேஷியல், நுட்பமான சருமத்திற்கான பேஷியல் என வகைப்படுகிறது.

பேசிக் கிளினிக்:-

இதில் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுவது, அழுக்குகள், கருந்துகள்கள் போன்றவை அகற்ற உதவி புரியும். எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம்.

நார்மல் பேஷியல்:-

மேற்சொன்னதைவிட சற்று அதிகபடியான மசாஜ் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தோலின் ஆரோக்கியம் மற்றும் பொலிவு மேம்படும்.

ஃபாராப்பின் பேஷியல்:-

ஃபாராப்பின் அடிப்படையாக கொண்ட முகப்பூச்சு பூசப்பட்டு செய்யப்படும் பேஷியல் இதன் மூலம் தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் வயதான தோற்றத்தை நீக்குகிறது. இந்த பேஷியல் மூலம் பிரகாசம் வீசும் மென்மையான சருமம் கிடைக்கும்.

பயோலிப்ட் பேஷியல்:-

இது தொய்வடைந்த சருமத்திற்கு ஏற்றதாகும். இதனை பேஸ் லிப்ட் என்றும் கூறுவர். இதன்பின் சருமம் நிறத்துடன் மற்றும் நிலைத்த தன்மையுடன் காணப்படும்.

முகப்பரு பேஷியல்:-

முகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ளவர்களுக்கானது. சுத்தம் செய்யப்பட்ட முகத்தின் மீது கிளைகோலிக் ஆசிட் முகப்பருக்கள் உள் செல்லுமாறு செய்யப்பட்டு அதன்மீது ஆன்டி-பேக்டிரியல் மாஸ்க் போடப்படும். இந்த பேஷியலில் மசாஜ் தேவையில்லை. வாரம் இருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

அரோமா தெரபி பேஷியல்:-

சிறப்புமிகு நறுமண எண்ணெய்கள் மூலம் செய்யப்படும் பேஷியல். தோல் பகுதியில் சேர்ந்துள்ள கழிவுகள், நச்சுகள் வெளியேறி தோலின் இயற்கை பண்புகள் மேம்படுத்த செய்ய இந்த பேஷியல் உதவிபுரிகிறது.

கோல்டு பேஷியல்:-

முகச்சருமத்தினை இளமை தன்மையுடன் போஷிக்க செய்ய 24 கேரட் தங்க பேஷியல் உதவுகிறது. செல்களை மறுஉருவாக்கம் செய்யவும், சருமத்தை பொலிவாக ஆக்கவும் இது உதவுகிறது.

மாசு எதிர்ப்பு பேஷியல்:-

நகரத்தின் வெளிசூழல் பணிகள் காரணமாய் முகத்தில் ஏராளமான மாசுக்கள் படியும். அதனை போக்க விட்டமின்-ஏ, பீட்டா-கரோடின் மற்றும் விட்டமின்-ஈ கொண்ட பேஷியல் நல்ல பலனை தருகிறது.

கோலகன் பேஷியல்:-

இது பலதரப்பட்ட பேஷியல் ஒன்றிணைந்தது. கிளினிங், லிம்போதிங் டிரைனேஜ் மசாஜ், ஹீட்டாங் மினரல், பாராப்பீன் மாஸ்க் மேல் கோலகன் ஷீட் மூடப்பட்டு செய்யப்படும் பேஷியல். அனைத்து சருமங்களுக்கு ஏற்ற பேஷியல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!!
Next post பறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட இளைஞர்! அதிர்ச்சியில் முழ்கிய பணியாளர்கள்..!!