பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

Read Time:1 Minute, 46 Second

அமெரிக்காவில் ஆற்றில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் வீடு ஒன்று மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.குறித்த வீடானது ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த பாலத்தில் மோதி நொறுங்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள வாரென் பகுதியில் நிகழ்ந்துள்ளது. குறித்த காட்சிகளை அப்பகுதியில் குடியிருக்கும் நபர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் ஏற்பட்ட புயலால் குறித்த வீட்டின் கூரை மற்றும் ஒரு பக்க சுவர் என சேதமடைந்து இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்த குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அதில் உடைந்து விழுந்த அந்த வீடானது பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே பாலம் ஒன்றில் மோதி சுக்கலாக உடைந்துள்ளது. குடியிருப்பு ஒன்று பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உடைந்து சிதறுவதை காண்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது என அதை படம் பிடித்த நபர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யுடன் நடிக்க 3 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை..!!
Next post விமர்சித்தவர்களை வலைதளத்தில் மறைமுகமாக கிண்டல் அடித்த அமலாபால்..!!