பூசணிக்காயின் மூலம் அழகைப் பெறலாம்! எப்படி தெரியுமா??..!!
பூசணிக்காய் மூலம் நன்மைகளைப் பெற அதனை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
மசித்த பூசணிக்காயையும் ஒரு டீ ஸ்பூன் தேனையும் கலந்து சருமத்தில் தடவி 1௦ நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
1 டீ ஸ்பூன் பூசணி சாற்றுடன் கெட்டித்தயிர் கலந்து அந்தக்கலவையை சருமத்தில் தடவி 1௦ நிமிடம் வைத்திருந்து காய்ந்த பின்னர் இளஞ் சூடான நீரில் கழுவினால் வயதான சருமத்தின் அறிகுறிகளை நீக்கி விடலாம்.
பூசணி சாற்றையும் பப்பாளி கூழையும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்து அந்தக் கலவையை சருமத்தில் தடவி 1௦ நிமிடங்களில் காய்ந்தவுடன் குளிரிந்த நீரில் கழுவ வேண்டும்.இதன் மூலம் சிகப்பழகை பெறலாம்.
மசித்த பூசணிக்காயுடன் 2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதனை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் பிரகாசமான சருமத்தைப் பெறலாம்.
வேகவைத்த ஓட்ஸையும் பூசணி சாற்றையும் கலந்து சருமத்தில் தடவி 1௦ நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் குளிர்ந்த ஏறினால் கழுவ வேண்டும்.சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற முடியும்.