அழகுடன் கம்பீரத்தையும் தரும் எம்பிராய்டரி அனார்கலி..!!

Read Time:6 Minute, 3 Second

இளநங்கையரை குறி வைத்து அவ்வப்போது புதிய ஆடைகள் புதிய வடிவமைப்புடன் வெளியிடப்படும். அவை பழங்கால பாரம்பரிய ஆடைகளாக இருந்தாலும் அதில் சில புதுமைகளும், ஆர்வமூட்டும் சில இணைப்புகளும் செய்யப்பட்டு புதிய வடிவில் உலா வரும். அந்த வகையில் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் ஆடை என்பதில் அனார்கலிக்கு தனி இடம் கிடைத்துள்ளது.

ஏனென்றால் அனைத்து தரப்பு பெண்களும் அணியகூடிய ஆடை என்பதுடன் அனார்கலி அணிந்தவுடன் ஓர் ராஜ கம்பீர தோற்றத்தை தருவதாக உள்ளது. அனார்கலி என்ற ஆடை வடிவமைக்கப்பட்டதே ராஜ குடும்பத்து பெண்களுக்கு தான். மொகலாய சாம்ராஜ்ய வம்சத்தினருக்கு வடிவமைக்கப்பட்ட ஆடை அச்சாம்ராஜ்ய இளவரசி அனார்கலியின் பெயராலேயே அழைக்கப்பட்டுவிட்டது. அனார்கலி என்றால் மாதுளம் பூ என்று அர்த்தம் அந்த பூவை போல ஆடையின் கீழ் பகுதி குடை போல விரிந்திருப்பதே, அனார்கலியின் தனிச்சிறப்பு.

அனார்கலி ஆடை என்பது சல்வார் சூட்-லிருந்து சற்று மாறுபட்டது. அதாவது மேல் சட்டை என்பது இடுப்பு பகுதியின் கீழிறிருந்து விரிந்து வருகின்றவாறு குடை போல, அகலமான பிரில்கள் கொண்டவாறு இருக்கும். இதன் பேண்ட் பகுதி இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இருக்கும்.

அதுபோல் கைப்பகுதி முழு நீளம் கொண்டவாறு மெல்லிய துணியில் உருவாக்கப்பட்டிருக்கும். தரையில் புரளுகின்ற நீளம் அல்லது கணுக்கால் மேல் பகுதி என்றாவறு நீண்ட மேல் ஆடை பகுதி. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் மிக பிரபலமான ஆடையாக திகழும் அனார்கலி ஆடை ஆண்டுக்கு ஆண்டு புதிய மெருகுடன் உலா வருகின்றன.

பண்டிகை மற்றும் விழாகளுக்கு அணிய ஏற்ற ஆடையான அனார்கலி அணியும் போது பெண்களின் அழகும், ஆளுமையும், கம்பீரமும் கூடவே செய்கின்றன.

முழு நீள எம்பிராய்டரி அனார்கலி :

ஷிப்பான் மற்றும் ஜார்ஜெட் துணி வகையில் மேற்புறம் பட்டு சரிகையில் எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான அனார்கலிகள் புதுவரவு. இதன் முழு நீள மேல் ஆடையில் கழுத்து பகுதியில் மற்றும் அகல விரிந்த மடிப்பு பகுதியின் நடுவே கண்கவரும் எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட பட்டு சரிகையில் அழகிய பூக்கள், சுருள்கள், இலைகள் போன்றவை விரைப்புடன் நிற்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. நீளமான கைப்பகுதியின் மணிகட்டு பகுதியிலும் எம்பிராய்டரி செய்யப்படடுள்ளன.

அதுபோல் மேல்சட்டையின் மார்பு பகுதி மற்றும் கீழ் பார்டர் பகுதிகள் தகதகக்கும் தங்க சரிகையில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட அனார்கலி அற்புதம். மாதல்பூரி பட்டு துணியில் அழகிய சரிகை எம்பிராய்டரி ஜொலிக்கிறது.

பிராக் மாடல், பனாரஸ் பட்டு எம்பிராய்டரி அனார்கலி அதி அற்புதம் ஓர் இளவரசி போன்ற தோற்றத்தை தருகின்றது.

ஆடை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலி :

அனார்கலி மாடல் ஆடையின் முழு மேல்பகுதியும் அழகுடன் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளன. இதற்கென மூன்று வகை துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன சாடின் துணியின் பின்னளவில் மேற்புறம் நெட் துணியின் மீது தங்க சரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளன. பெரிய பூக்களும், சிறிய பூக்களும், கொடி பின்னல்களும் கொண்டவாறு மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை எம்பிராய்டரி வேலைப்பாடு கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரிய பிராக் போன்ற அமைப்பில் இதன் கைபகுதி குட்டை அமைப்புடன் கனகச்சிதமாக உள்ளது. இதனை அணிபவர் ஒரு தங்க தேவதை போல் காட்சி தருவார்.

ஜார்ஜெட் துணியில் கோட் மாடல் அனார்கலி :

ஜார்ஜெட் துணியில் நீளமான கோட் அமைப்புடன் இடுப்பு பகுதியிலிருந்து இரு பிரிவாக பிரிந்து உள்ளபடி அதிக விரிப்புகள் இல்லாத கோட் மாடல் அனார்கலி. இதில் ஆடையின் ஓர் கைப்பகுதியில் அதிக வளைவுகளுடன் கூடிய கொடி மற்றும் பூக்கள், ஒரு கைப்பகுதியில் ஆங்காங்கே சிதறிய பூக்கள் என்றவாறு வித்தியாசமாக எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளன. வி-நெக் வெட்டுகளுடன் கச்சிதமான கழுத்து அமைப்பு உள்ளது. விழாகாலத்திற்கு ஏற்ற எம்பிராய்டரி அனார்கலி அழகுடன் வந்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதுவந்தவர்களுக்கு மட்டும் படியுங்க -பாலியல்..!!
Next post நடிகை தீபிகா படுகோனை கண்ட இடத்தில் தொட்ட நடிகரின் தம்பி..!!