ஓவியங்களை ஸ்கான் செய்யுங்கள்! வரலாற்றை ஸ்மார்ட் PHONE காண்பிக்கும்..!!
அருங்காட்சியகங்களுக்கு செல்லும் போது, கலைப் படைப்புக்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கான் செய்து, அவை தொடர்பில் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், ‘ஸ்மார்ட்டிபை’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலியினை ஐபோன் மற்றும் அன்ரொயிட் போன்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
கைபேசிகளுக்குள் அடங்கியுள்ள இவ் உலகில், தொலைபேசிகளுக்கான மென்பொருட்களும் அதிகளவில் உருவாகி, எமது தேவைகளை காலத்தின் வேகத்துக்கு ஏற்ப இலகுபடுத்துகின்றது.
அந்த வகையில், குறித்த செயலியும் சுற்றுலா செல்பவர்களுக்கு மொழி, பாகுபாட்டை தூண்டிவிடாமல் பயன்பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.