மதுரா கோவிலில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் சாதுக்கள் – வீடியோ..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ராதா ராணி கோவிலில் இரண்டு சாதுக்கள் ஒருவரையொருவர் கையில் உள்ள தடியால் தாக்கி சண்டை போட்டனர். இருவரும் யார் வந்து தடுத்தாலும் சண்டையை நிறுத்தவில்லை.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் சண்டை போட்டுக் கொண்டது பதிவானது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. புனிதமான கோவிலில் சாதுக்கள் சண்டை போடுவது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.