நடிகை லேகா வாசிங்டனுக்கு திருமணம்: பத்திரிகையாளரை மணக்கிறார்..!!
உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம்கொண்டான்’, ‘கல்யாண சமையல் சாதம்‘, ‘அரிமா நம்பி’ உள்பட பல படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவர் இசை ஆல்பங்களில் ஆடிப்பாடி இருக்கிறார்.
லேகா வாஷிங்டன், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பல்லோ கட்டர்ஜியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். வருகிற 18-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
லேகா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தைச் சேர்ந்தவர். மும்பையில் இவர்கள் திருமணம் பொதுவான முறைப்படி நடக்கிறது. திருமணம் நடைபெறும் 18-ந் தேதியே வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.