தாய் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த வேளை நடந்துள்ள கொடூரம்! சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் காணொளி..!!

Read Time:2 Minute, 35 Second

இந்தியா – மும்பையில் தாய் தனது குழந்தைக்கு சிற்றூர்தியில் வைத்து பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது வானங்கள் தரித்து நிற்ககூடாது என்று தடை விதிக்கப்பட்ட இடத்தில் சிற்றூர்தியை நிறுத்தியதால் அதனை காவல்துறையினர் இழுத்துச்சென்றமை கடும் சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது.

ஜோதி மாலே என்ற பெண் தனது கைக்குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது வானங்கள் தரித்து நிற்ககூடாது என்று தடை விதிக்கப்பட்ட இடத்தில் சிற்றூர்தியை நிறுத்தியதால் அங்கு இருந்த சிற்றூர்தியை கொக்கி மாட்டி மும்பை காவல்துறையினர் இழுத்து சென்றனர்.இந்நிலையில் குறித்த பெண் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, தனது மருத்துவர் பரிந்துரை சீட்டையும் காண்பித்துள்ளார்.

ஆனால் அவரது வேண்டுகோளை நிராகரித்த மும்பை காவல்துறையினர் சிற்றூர்தியை இழுத்து சென்றனர். இந்த காட்சியின் காணொளி சமுக வலைத்தளங்களை பரவிவருகிறது

இது குறித்து ஜோதி மாலே செய்தியார்களிடம் கூறியதாவது.”காவல்துறையினர் என்னை கீழே இறுங்குமாறு ஒருமுறை கூட கூறவில்லை. நான் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என கூறிய போதும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

குழந்தையுடன் நான் பின் சீட்டில் இருக்கும் போதே காவல்துறையினர் சிற்றூர்தியை இழுத்து சென்றனர்.அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேறு இரண்டு சிற்றுர்திகளை காவல்துறையினர் இழுத்து செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மும்பை போக்குவரத்து காவல் இணை ஆணையர் அமிதேஷ் குமார் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `பிக் பாஸ்’ ஆரவுக்கு அடிக்கும் ஜாக்பாட்..!!
Next post தாமதமாக விந்து வெளியேறுதல்: முடிவடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளல்..!!