இடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதில் கண்டறிய உதவும் நவீன ரேடார் கருவி: இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 55 Second

மீட்புப் பணிக்கு உதவும் அதிநவீன ரேடார் கருவியை இஸ்ரேலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை எளிதில் மீட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ராணுவம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும் சிறப்புப் படைப் பிரிவினருக்கு பேருதவியாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ள ரேடார் கருவிகளைத் தான் போலீஸôரும், ராணுவமும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தற்போது முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி, பல்வேறு வகையான சுவரினையும் எளிதில் ஊடுருவி பார்க்கும் தன்மையுடையதாகும். இதன் துணைக் கொண்டு, கட்டட இடிபாடுகள் மற்றும் தீ விபத்தால் சேதமடையுடம் கட்டங்களில் யாரேனும் சிக்கியிருந்தால், அவர்களை விரைவாக மீட்க இக்கருவி உதவும். இது குறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவன இயக்குநர் அமீர் பெரி, “சுவரில் எளிதில் ஊடுருவும் கருவியைத் தயாரிக்கும் திட்ட யோசனை 1960-ம் ஆண்டிலிருந்தே கூறப்பட்டு வந்த போதிலும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தற்போதே இது சாத்தியமாகியுள்ளது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவருடன் வந்து நடிகை மோகினி விவாகரத்து மனு; ஒருமித்த கருத்துடன் பிரிந்து செல்கிறோம்
Next post சண்டைக்காட்சியில் ஜேம்ஸ்பாண்டு’ நடிகருக்கு மீண்டும் காயம்