பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை..!!
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான பிரமாண்ட படம் ‘பாகுபலி’. இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த பிரபாஸுக்கு ரசிகைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
அவர் கூட ஒரு பேட்டியில் ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு தனக்கு 6000க்கும் அதிகமான வரன்கள் வந்ததாக கூறினார். இந்த நிலையில் பிரபாஸின் தீவிர ரசிகை ஒருவர் அவரின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.