யுவன் ஷங்கர் ராஜா மிரட்டும் ‘பேய் பசி’..!!

Read Time:2 Minute, 46 Second

ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ள ‘பேய் பசி’ படம் குறித்து இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில்,

” வேலை இல்லா நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும். இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும். ஒரே இடத்தில் நடந்தாலும், சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது, ‘பேய் பசி’ அமைந்தது. இக்கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் என உறுதியாக நம்புகிறேன்.

யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் பின்னணி இசை படத்திற்கு முக்கிய பலமாகும். இக்கதையையும், காட்சிகளையும் மெருகேற்றி, திகிலின் உச்சத்திற்கே கொண்டு போயுள்ளது அவரது இசை. இப்படத்திற்காக மிக சுவாரஸ்யமான ஒரு ப்ரோமோ பாடலையும் அவர் இசையமைத்து பாடியுள்ளார்.

இந்த படத்தை ‘ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்’ சார்பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்துள்ளார்.

ஹரி கிருஷ்ணா பாஸ்கர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின், நமீதா, டேனியல், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் ஒரு மிக சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டோனி சானின் ஒளிப்பதிவில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில் ‘பேய் பசி’ உருவாகியுள்ளது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்..!! (கட்டுரை)
Next post குண்டு பாய்ந்த பிறகும் திருடர்களை தடுத்த ஏடிஎம் காவலாளி – வீடியோ..!!