டிசம்பரில் வெளியாகும் ‘பள்ளிப்பருவத்திலே’..!!
வி.கே.பி.டி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’.
இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சாகருப்பு, பொன் வண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. வினோத் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு விஜய் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
திரையுலகப் பிரபலங்கள் பலரிடமும் பாராட்டுக்களை பெற்ற இந்த படம் டிசம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக படக்குழுனர் தெரிவித்துள்ளனர்.