ஈரான் நிலநடுக்கம்: தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன் – வைராகும் வீடியோ..!!

Read Time:2 Minute, 22 Second

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட் கிழமை 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவானது. இதில் மேற்கு ஈரானில் உள்ள சார்போல்-இ-‌ஷகாப் நகரில்தான் பலத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஈரானில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் அடங்குவர். அப்பகுதிகளில் அரசு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பல தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் கெர்மன்ஷா மாகாணத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைக்கிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தோழியை அழைத்துக் கொண்டு உணவு வாங்கிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறுவன் அங்கு உணவு கொண்டிருப்பவர்களிடம் தனது தோழியை கையைப் பிடித்து அழைத்து செல்கின்றான். அவர்களிடம் ‘நீங்கள் இவளுக்கு உணவு கொடுக்கவில்லை’ என்று கூறி உணவு வாங்கிக் கொடுக்கிறான். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சிறுவனின் மனிதநேயத்தை கண்டு வியந்தனர். உலகில் இன்னும் மனிதநேயம் இருக்கிறது என்பதற்கு சிறுவன் ஒரு எடுத்துக்காட்டு அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாச்சியார் டீசரில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!! (வீடியோ)
Next post ‘மூக்கை அறுப்போம்’ என மிரட்டல்: தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..!!