`திருட்டுப்பயலே-2′ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..!!
கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது.
சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுப்பயலே-2′ படத்தில் பாபி சிம்ஹா – பிரசன்னா – அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.