அணுஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு என்கிறது அமெரிக்கா

Read Time:2 Minute, 17 Second

அணுசக்தி ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என்று அமெரிக்க கூறியுள்ளது. சர்வதேச வர்தகத்துக்கான அமெரிக்க செயலாளர் கிறிஸ்டோபர் படில்லா திங்கட்கிழமை வாஷிங்டனில் இதைத்தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா விரைவாக ஏற்றுக்கொள்வது நல்லது என்றார் அவர். எரிசக்தி அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது 2030ம் ஆண்டில் இந்தியா 3வது இடத்துக்கு வந்துவிடும் இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்கிறது நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரிக்கிறது அடுத்த பத்து ஆண்டுகளில் ஒருலட்சத்த 60 ஆயிரம் மெகாவோட் மின்சாரம் இந்தியாவுக்கு கூடுதலாக தேவைப்படும் எனவே அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைச்சமாளிக்க இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பவது அவசியம் சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான சக்தி தொழில் நுட்பத்தை உருவாக்கலாம் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றலாம் சுத்தமான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் நுட்பத்தை உருவாக்கவும் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றலாம் சுத்தமான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்ப தொழில்நுட்பத்தை வழங்க எதிர்வரும் செப்டெம்பரில் அமெரிக்காவின் உயர்நிலை வர்த்தக குழு இந்தியாவுக்கு செல்லும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய ஈபிடிபி!!
Next post பயங்கரவாத அமைப்பை தற்காலிகமாக மட்டுமே தோற்கடிக்க முடியும்