முஷாரப்புக்கு எதிராக 10 அம்ச குற்றப்பத்திரிகை – நவாஸ் ஷெரீப்பின் கட்சி தயாரிப்பு
Read Time:1 Minute, 16 Second
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அவருக்கு எதிராக 10 அம்சகுற்ற பத்திரிகையை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் லீக் கட்சி தயாரித்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து தூக்கியெறிந்தமை, சிறையில் அடைத்தமை, பின்னர் அவரை நாடுகடத்தியமை, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கியதுடன் குடும்பத்தோடு அவர்களை சிறைக்கு அனுப்பியமை போன்ற முஸாரப் மீதான குற்றச்சாட்டுகள் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. தேவையற்ற சூழலில் கார்கில் யுத்தம் மேற்கொண்டு 800 பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளும் எண்ணற்ற வீரர்கள் பலியாக காரணமாக இருந்தவர் முஷாரப் தனது சுய ஆதாயத்துக்காக இராணுவத்தை தவறாக பயன்படுத்தியவர் எனவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.
Average Rating