கணவன் மனைவியாக பிரிவது நல்லது! புரூஸ்லி நடிகை கிரித்தி கர்பந்தா..!!
நடிகை கிரித்தி கர்பந்தா ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ்லி படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தற்போது கெஸ்ட் இன் லண்டன் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறாராம்.
படம் பற்றி பேசியவர் இதில் ஆடம்பரமாக வாழ்வதை விட தன் கணவர் அன்பாக இருக்க வேண்டும் என்ற கேரக்டர். இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரு கதை. திருமணம் எளிதாக செய்துவிடலாம்.
ஆனால் வாழ்வது கடினம். திருமணத்திற்கு முன்.பின் என்ன நடக்கிறது என்பதை பற்றி சொல்லும். மனைவியும், கணவனும் உண்மையாக இருப்பதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்.
பெண்கள் இப்போதெல்லாம் பிரச்சனைகளை உடனே வெளியே சொல்லிவிடுகிறார்கள். விவாகரத்தும் செய்கிறார்கள். உறவு சரியில்லை எனில் இருவரும் பிரிந்துவிடுவது நல்லது.
நான் ஒருவேளை சினிமாவில் நடிக்கவில்லை என்றால் மூன்று குழந்தைகளுக்கு தாயாகியிருப்பேன் என கூறியுள்ளார்.