பாட்டே கதியென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா… தற்போது இவரின் பரிதாப நிலை தெரியுமா?..!!

Read Time:2 Minute, 25 Second

ஒரு தனியார் தொலைக்காட்சியின் மூலம் சூப்பர் சிங்கராக உலக தமிழர்களை கவர்ந்து வந்தவர் ஃபரிதா. 2016ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடம் பிடித்தவர். இவர் காதலித்து திருமணம் செய்து ரேஷ்மா, ரெஹானா என்ற இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் போதே கணவரை இழந்து வாழ்கிறார். பாட்டு ஒன்றே அவருக்கு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போது அது இல்லாமல் அவர் சந்திக்கும் துன்பத்தை பகிர்ந்துள்ளார்.

உலகிற்க்கு என்னை அறிமுகப்படுத்தியது விஜய் ரிவி தான். அதற்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். இப்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறேன். ரேஷ்மா டாக்டராக வேண்டும் என்றும், ரெஹானா காஸ்டியூம் டிசைனிங்கிலும் ஆர்வமான இருப்பதால் தன் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக சிரமம்படுகிறேன்.

எனக்கு தெரிந்தது பாடுவது மட்டும் தான். வாய்ப்புகள் வரவில்லை. சில படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது. சமீபத்தில் யுவன் இசையில் பாடியிருக்கிறேன் அதைதான் நம்பியுள்ளேன். 36 வயதான எனக்கு இரு குழந்தைகளால் தான் தற்போது மகிழ்ச்ச்சியை தருகிறார்கள். அவர்களை 4 வருடத்திற்குள் படிப்பு மற்றும் அவர்களுக்கென சேமிப்பை நான் ஒதுக்க வேண்டும்.

என்னை போன்றவர்களுக்கு வயதை பார்க்காமல் குரல் வளத்தை பார்க்கும் வாய்ப்புகள் வரலாம், இல்லையென்றால் மியூசிக் கிளாஸ் வைத்தாவது வாழ்க்கையை பார்க்க வேண்டும். பாடகர்கள் என்றாலே பல நிகழ்ச்சியில் பாடி பணம் சேர்ப்பது தான் என்று பலரின் எண்ணம். இப்படியும் ஒரு வலிகள் இருக்கத்தான் செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை’ – உலக அழகி மனுஷி சில்லர் பேட்டி..!!
Next post மீண்டும் விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?..!!