டோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு

Read Time:1 Minute, 27 Second

UK.blair_tony.jpgஇங்கிலாந்து பிரதமர் டோனிபிளேரின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் பதவி விலகக்கோரி அவரது மந்திரிகள் 6 பேர் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் அவரது கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் வருடாந்திர கூட்டம் பிரைட்டன் நகரில் நடந்தது. அதில் பிரதமர் டோனிபிளேர் கலந்து கொண்டார். அவர் பேச எழுந்ததும் பலர் அரங்கை விட்டு வெளியேறினர். பலர் அவர் ஈராக் பற்றி பேசியபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.

ராணுவத்தை ஈராக்கில் திரும்பப் பெறவேண்டும் என்ற பேனரை தொழிற்சங்க பிரதிநிதிகள் இங்கே பிடித்து கொண்டு இருக்கிறார்கள். ராணுவம் ஈராக்கில் இருக்க வேண்டும் என்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் கோருகின்றன. கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இன்னொரு பக்கத்தின் நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்று டோனிபிளேர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தனிமையில் வாடும் “வளைகுடா மனைவிகள்”
Next post விடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சு நடத்த சம்மதம் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது