கர்நாடகாவில் டி.வி. சீரியலை பார்த்து நெருப்பு மீது நடனம் ஆடிய சிறுமி மரணம்..!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள கரிகரா என்ற நகரில் நடத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அப்பகுதியைச் சேர்ந்த பிரர்த்தனா என்ற சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீதாமான விளையாட்டை விளையாடியுள்ளார்.
சிறுமி டி.வி. சீரியலில் வருவது போல் தன்னை சுற்றி பேப்பர் மற்றும் சாரியை கொண்டு தீ வைத்துள்ளார். படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மறுநாள் உயிரிழந்தார்.
அவரின் மரணத்திற்கு சீரியல் தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சிறுமி அந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளார். அதில் பல வித்தியாசமான செயல்கள் மற்றும் மாயாஜாலங்கள் செய்யப்படுகின்றன. அதை பார்த்து சிறுமி இந்த காரியத்தை செய்து விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். டி.வி. சீரியலில் தற்சமயம் பேய், சூனியம், மந்திரஜாலம் போன்ற கதை வருகிறது. இந்த வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
டி.வி. சீரியலை பார்த்து நெருப்பு மீது நடனம் ஆட முயன்ற சிறுமி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது