முன்னாள் காதலிகள் அமர்க்களம்: ரூ.85க்கு இன்டர்நெட்டில் கிளின்டன் பற்றி “கிளுகிளு”
இன்டர்நெட்டில் எப்படி காசு பார்ப்பது என்பதற்கு வரைமுறையே இல்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் காதல் லீலைகள் பற்றி அவரது இரண்டு முன்னாள் காதலிகளின் பேச்சு இப்போது ரூ.85க்கு சுடச்சுட வசூலாகிக் கொண்டிருக்கிறது. 1992க்கு முன் கிளின்டன் ஆர்கன்சாஸ் மாநில கவர்னராக இருந்தார். அப்போது அரசு ஊழியர்களாக அவரது அலுவலகத்தில் பணியாற்றிய பெண்கள் பவுலா ஜோன்ஸ், ஜெனீபர் பிளவர்ஸ். அதிபர் தேர்தலின்போது தனக்கும் கிளின்டனுக்கும் 12 ஆண்டுகளாக உறவு இருப்பதாக பிளவர்ஸ் கூறியது சர்ச்சையை கிளப்பியது. முதலில் அதை மறுத்த கிளின்டன், பிறகு ஒருவழியாக “ஒரே ஒருமுறை மட்டும்தான்” என்று ஒப்புக் கொண்டார். தன் பங்குக்கு பவுலா ஜோன்சும் 1991ல் கிளின்டனை சந்திக்க அவரது ஓட்டல் அறைக்குச் சென்றபோது தன்னிடம் அத்துமீறி விட்டதாக கிளப்பினார். எல்லாவற்றையும் தாண்டி அதிபரான கிளின்டனுக்கு மோனிகா லெவன்ஸ்கி மூலம் அடுத்த பிரச்னை கிளம்பியது. இப்போது பவுலா ஜோன்சும், ஜெனீபர் பிளவர்சும் சேர்ந்து மூன்றாம் நபர் ஒருவருக்கு இன்டர்நெட்டில் பேட்டி தந்துள்ளனர். அதில் கிளின்டனின் அந்தரங்க லீலைகளையும், அங்க அடையாளங்கள், மோனிகாவுடனான உறவையும் விலாவரியாக கிறங்கடிக்கும் குரலில் விவரிக்கின்றனர். ரூ.85 செலுத்தினால் இன்டர்நெட்டில் இப்பேட்டியை ரசிக்கலாம் என்று அறிவித்தனர். இப்போது அமெரிக்காவில் இந்த நெட் பேட்டி பல லட்சங்களை வசூலித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பேட்டியின் முடிவில் கிளின்டனின் Ôஅப்பாவிÕ மனைவி ஹிலாரியையும் இரண்டு அம்மணிகள் விட்டு வைக்கவில்லை. “புருஷனைக் கைக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாதவள், நாட்டை எப்படி கைக்குள் வைப்பதாம்?” என்று கேட்டு, அதிபர் பதவிக்கான ஜனநாயக கட்சி போட்டியில் ஒபாமாவிடம் அவர் தோற்றத்தையும் கிண்டல் அடித்துள்ளனர்.
Average Rating