மூன்று மணிநேரம் வரை உருகாத அதிசய குளிர்களி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 59 Second

ஜப்பான் நாட்டின் கனசவா பல்கலைக்கழகத்தின் (Kanazawa University) ஆராய்ச்சியாளர்கள், குளிர்களி( ice-cream) உருகிவிடாமல் அதன் உருவத்தினை பராமரிக்கும் ஒரு வழியினை கண்டுபிடித்துள்ளனர்.ஜப்பான் நாட்டின், கனசவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், அறை வெப்பநிலைக்கேற்ப, மூன்று மணிநேரம் வரை உருகாது, அதன் உருவத்தினை பராமரிக்கும் குளிர்களியைக் கண்டுபிடித்துள்ளனர்.

பரிசோதனையில் தலைமுடி உலர்த்தும் கருவி மூலம் சூடான‌ காற்றினை வீசச் செய்த‌ போதும்கூட குளிர்களி உருகவில்லை. ஐந்து நிமிடம் சுடுகாற்று பட்டும் கூட‌ குளிர்களி உருமாற‌வில்லை.

இது எவ்வாறு சாத்தியமாகும் என ஆராய்ந்ததில் குளிர்களியில் சேர்க்கப்பட்ட‌ பாலிபினால் என்ற திரவம்தான் காரணம் என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

செம்புற்றுப்பழங்களிலிருந்து (Strawberries) பிரித்தெடுக்கப்பட்ட பாலிபினோல் திரவத்துடன் குளிர்களி தயார் செய்யப்பட்டுள்ளது.

பாலிபினோல் திரமானது, நீர் மற்றும் எண்ணெயை பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் தன்மையினை கொண்டுள்ளது என கனசவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான டோமிஹீசா குறிப்பிட்டுள்ளார்.

இந்தவகை குளிர்களியானது சொக்லேட், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி எனப் பல்வேறு சுவைமணங்களில் (flavour) கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியீடு தள்ளி வைப்பு: லைகா நிறுவனம் அறிவிப்பு..!!
Next post அஜித்துடன் இணையும் பிரபல மலையாள நடிகர்..!!