By 15 June 2008 0 Comments

நெல்லை ரவுடி வெட்டிக்கொலை; தொடர்ந்து `செக்ஸ் சில்மிஷம்’ செய்ததால் தீர்த்துக்கட்டினோம்; அரிவாளுடன் கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்

பாளை பொட்டல் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர் பிரபல ரவுடியாக இருந்தார். வெடி குண்டு தயாரிப்பு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் தனது மனைவி முனியம்மாள் மற்றும் 4 பெண் குழந்தைகளை விரட்டியடித்து விட்டு, பாளை கக்கன்நகரில் உள்ள அண்ணன் மனைவி வேலம்மாள் (40) என்பவருடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்தார். வேலம்மாளுக்கு முத்துமாரி (22), செல்வி (19), சுகந்தி (12) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ள னர். வீட்டில் மகள் கள் இருக்கும் போதே செல்வ ராஜ் குடித்துவிட்டு வந்து வேலம்மாளிடம் `செக்ஸ்’ தொந்தரவு செய்து வந்தார். இதனால் அவர் களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை செல்வராஜை வேலம் மாளும், அவரது மகள் முத்துமாரியும் ஓட, ஓட விரட்டி சரமாரி வெட்டிக் கொலை செய்தனர். அதன் பிறகு பிணத்தை சாக்கில் கட்டி வீட்டுக்கு தூக்கிச்சென்று மண் எண்ணை ஊற்றி தீவைத்து எரித்தனர், இந்த சம்பவம் பாளை யில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற் பார்வையில் இன்ஸ் பெக்டர் நாக ராஜன் தலைமையில் சப்- இன்ஸ் பெக்டர்கள் விஜய குமார், சங்கரபாண்டியன், மற் றும் போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வேலம் மாளையும், அவரது மகள் முத்துமாரியையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று வேலம்மாளும், முத்து மாரியும் உறவினர் வீட்டில் வெளிïருக்கு தப்பிச் செல்ல பஸ்நிலையம் சென்றனர். அப்போது தனிப்படை போலீசார் வேலம்மாளையும், முத்து மாரியையும், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான காரணம் குறித்து முத்துமாரி போலீ சில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-

என் தந்தை பட்டன் இறந்த பிறகு எங்கள் தாய் வேலம் மாளும், நாங்களும் மிகவும் கஷ்டப்பட்டோம். அப்போது எங்களுக்கு உதவி செய்வது போல் வந்த சித்தப்பா செல்வராஜ் என் தாயார் வேலம்மாளிடம் அடிக்கடி வரம்பு மீறி நடந்து `செக்ஸ்’ தொந்தரவு செய்வார். எங்கள் தாயார் எங்கள் பாதுகாப்புக்காக வேறு வழியின்றி சித்தப்பா செல்வராஜை எங்களுடன் தங்கி இருக்க சம்மதித்தார்.

ஆனால் அவர் குடித்து விட்டு எங்கள் அம்மாவை அடித்து உதைத்து படாத பாடு படுத்துவார். குடும்ப கஷ்டத்தில் அனைத் தையும் பொறுத்துக் கொண் டோம். அவரிடம் இருந்து தப்பிக்க நான் திருப்பூரில் மில் வேலைக்கு சென்றேன். அங்கு சம்பாதித்து 10 பவுன் நகை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

இங்கு குடிபோதையில் வீட்டுக்கு வரும் செல்வ ராஜ், என் தாயிடம் செக்ஸ் வெறியை காட்டுவதோடு நில்லாமல் என்னிடமும் வரம்பு மீறி செக்ஸ் சில் மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் செல்வராஜை அடித்து வீட்டுக்கு வரக் கூடாது என்று வெளியே விரட்டினோம்.

அப்போது எப்படியோ எனது 10 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு அவர் ஓடி விட்டார். நான் படாதபாடு பட்டு உழைத்த தங்க சங்கிலியை எப்படியாவது அவனிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கெஞ்சிப்பார்த்தேன். அவன் தரவில்லை. இதனால் போலீசில் அவன்மீது புகார் செய்தேன். அப்படியும் நகையை அவர் கொடுக்க வில்லை.

இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு குடி போதை யில் வந்த செல்வராஜ், நகை வேண்டும் என்றால் என்னுடன் வா என்று கையைப் பிடித்து இழுத் தார். இதனால் ஆத்திரம் தீர அடித்தோம். இதனால் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள சமு தாய கூடத்திற்கு சென்று படுத்துக்கொண்டார்.

இனி அவரை விட்டு வைத்தால் எங்கள் குடும் பத்தையே நாசம் செய்து விடுவான், நிம்மதியாக உழைத்து நகை வாங்கவும், முடியாது என்பதால் வெட்டிக்கொலை செய் வது என்று நானும், எனது தாயாரும் முடிவு செய்தோம். அதன்பிறகு நேற்று காலை ஆளுக்கொரு அரிவாளுடன் செல்வராஜ் படுத்து தூங்கி கொண்டிருந்த சமுதாய கூடம் உள்ள பகுதிக்கு சென்றோம்.

அங்கு வேறு சிலரும் அமர்ந்து இருந்ததால் எங்கள் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே சமதானமாக போவோம் வீட்டுக்கு வாரு(ங்கள் என்று செல்வராஜை வீட்டுக்கு அழைத்து வந் தோம். ஆனால் வரும் வழியிலேயே செல்வராஜ் எங்களை தரக் குறைவாக கேவலமாக பேசினான். இதனால் தெரு முனையில் வரும்போதே சரமாரியாக வெட்டினோம். உயிர் பிழைக்க தப்பி ஓடி னார். ஆனாலும் குடிநீர் குழாய் அருகே மறிëத்து சரமாரியாக வெட்டிக் கொன்றோம்.

அதன்பிறகு அவரது உடலை மறைக்க ஒரு சாக்கை கொண்டு வந்து அதில் செல்வராஜ் உடலை வைத்து கட்டி வீட்டுக்கு தூக்கிச் சென்றோம். ஆனால் சாக்குப் பையில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. இதனால் அவர் உயிர் பிழைத்து விடக் கூடாது என்று மண் எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டோம். ஆனால் போலீசார் விசா ரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீ சார் கொலை செய்ய பயன் படுத்தப்பட்ட அரிவாளை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தர். கைதான தாய்- மகள் 2 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Post a Comment

Protected by WP Anti Spam