By 13 June 2008 0 Comments

இந்த வார ராசிபலன் (13.06.08 முதல் 19.06.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: எதிரிகள் குறைவார்கள். பணப் புழக்கம் மகிழ்ச்சியைத் தரும். காரியங்கள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் குதூகலம் நிலவும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பெண்களுக்கு: எதிலும் நிதானம் அவசியம். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர்சரியாகும். சுப காரியப் பேச்சுக்கள் நல்ல திசையில் செல்லும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் நற் பெயர் கிடைக்கும். கடுமையாக உழைத்தால்தான் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் தேவை.

ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)

பொது: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம்தேவை. உடல்நலனில் அக்கறை தேவை. சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பீர்கள். இழுபறியாக இருந்து வரும் காரியம் கை கூடும்.

பெண்களுக்கு: எதிர்பார்த்த செய்தி வந்து மகிழ்ச்சியைத் தரும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். பணப் பிரச்சினை சரியாகும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வேலைப்பளு குறையும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொது: குடும்பத்தில் வளமை கூடும். பொருளாதாரம் மேம்படும். எதிரிகள் விலகுவார்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரியம் ஜெயமாகும். தொட்டது துலங்கும்.

பெண்களுக்கு: வழக்கு விவகாரங்களில் சாதக நிலை காணப்படும். எந்தக் காரியத்தையும் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை. முக்கியப் பிரச்சினைகளில் தீர்வு கிடைப்பதில் குழப்பம் நிலவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். முக்கியமுடிவுகள் எடுக்க சாதகமான வாரம்.

கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொது: வருமானம் அதிகரிக்கும். இதுவரை இருந்த தடங்கல்கள் நீங்கும். கடன் தொல்லை அடையும். நட்பு வட்டாரம் பெருகும். சுப காரியம் கூடி வரும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டு.

பெண்களுக்கு: கணவருடன் சுமூக உறவு காணப்படும். அலைச்சல் குறையும். குடும்பத்தில் உற்சாகம், மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரம் மேம்படும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சாதக நிலை உருவாகும். எதிர்ப்புகள் விலகும். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். வேலைப்பளுவை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

பொது: தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த சில குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். சொத்துப் பிரச்சினையில் சாதக நிலை காணப்படும். பொருளாதாரம் உயரும்.

பெண்களுக்கு: வருமானம் அதிகரிக்கும். மனதை வருத்தி வந்த பிரச்சினை சரியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் படிப்படியாக உயர்நிலையை அடையும். கை நிறைய காசு புழங்கும்.

வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகரிக்கும். இருப்பினும், சாதுரியமாக செயல்பட்டு சமாளிப்பீர்கள். காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை சரியாகும். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொது: முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூடுதல் கவனம் தேவை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

பெண்களுக்கு: அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் உபாதைகள் மனதை வாட்டும். சிறுசேமிப்பு கரையும். மனதில்குழப்பம் நிலவும். அலுவலக சூழல் சற்றே குழப்பமாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் திருப்திகரமாக இருப்பீர்கள். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். இடமாற்றத்தில் தாமதம் நிலவலாம். வெளியூர் பயணத்தால் பயன் உண்டாகும்.

துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொது: சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள். சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி, நிம்மதி, குதூகலம் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். விருந்துபச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வரும்.

பெண்களுக்கு: கணவருடன் சுமூக உறவு காணப்படும். பிணக்குகள் நீங்கும். பொருளாதாரம் மேம்படும். மனதில் நினைத்தது நடக்கும். சுதந்திரம் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். இடமாற்றம் இப்போதைக்கு இருக்காது. வேலையில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)

பொது: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நினைத்தது நடக்கும். தொட்டது துலங்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு: மனதுக்கு மகிழ்ச்சி தரும் காரியம் நடந்தேறும். வேலையில் இருந்து வந்த சிக்கல் நீங்கும். சேமிப்பு அவசியம். சுபகாரியப் பேச்சுக்களில் தடங்கல் காணப்படும்.

வேலை பார்ப்போருக்கு: மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் சுமூக உறவு காணப்படும். அனைவரும் உங்களுடன் அனுசரித்து நடந்து கொள்வர். சில முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது. இருப்பினும் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொது: பல்வேறு தொல்லைகளுக்கு இந்த வாரம் சுமூக தீர்வு காண்பீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் குறையும். எதிரிகளும் உங்களிடம் அடங்கி நடப்பார்கள்.

பெண்களுக்கு: தடைபட்ட காரியம் நடந்தேறும். சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுப்பார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வார மத்தியில் சந்தோஷச் செய்தி வந்து சேரும். வேலையில் திருப்திகரமாக இருப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது: கடன்தொல்லை சரியாகும். உடல் நலம் சிறப்பு பெறும். வேலையில் திருப்பத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கூடி வருகிறது. வழக்கு விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை.

பெண்களுக்கு: செலவுகள் அதிகரிக்கும். அலைச்சலும் கூடுதலாகவே இருக்கும். வாய்ச் சொல்லில் கவனம் தேவை. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சுமூக நிலை காணப்படும்.

வேலை பார்ப்போருக்கு: புதிய முயற்சிகளில் ஊக்கம்காட்டலாம்.கடல் கடந்து நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் திருப்தியுடன் இருப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்புள்ளது.

கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொது: திறம்பட செயல்பட்டு பல காரியங்களை ஆற்றுவீர்கள். யாரையும் எளிதில் கவர்ந்து விடுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி, நட்பு வட்டாரம் பெருகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் காத்திருக்கின்றன.

பெண்களுக்கு: கடவுள் காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். மனதுக்குப் பிடித்த காரியங்கள் நடந்தேறும். குடும்ப வாழ்க்கையில் சுமூக நிலை காணப்படும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் தோன்றி மறையும்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பார்ப்போருக்கு: உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. அவர்களை சார்ந்து இருப்பதை தவிர்க்கவும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: காரியத் தடை உண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். எதிலும் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு: அலுவலகத்தில் சந்தோஷச் செய்தி காத்திருக்கும். வேலையில் திருப்திரகமாக இருப்பீர்கள். எடுத்தகாரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுப செய்தி வந்து சேரும். தொலை தூரத்திலிருந்து சந்தோஷ நிகழ்வு குறித்த செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: திடீர் இடமாற்றத்தால், மன வருத்தம் ஏற்படும். பதவி உயர்வுக்கும் வாய்ப்புண்டு. சக ஊழியர்களால் பெரியஅளவில் பிரச்சினை இருக்காது. திட்டமிட்டு செயல்படுவது நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam