டுவிட்டரை கலக்கிய மெர்சல், பாகுபலி-2..!!

Read Time:2 Minute, 35 Second

சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரிமாறி வருவது மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டில் (2017) இதுவரை டுவிட்டரில் ‘மெர்சல்’ ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் அதிகமாக கவர்ந்துள்ளன. இந்த படங்கள் பற்றிதான் அதிகமான முறையில் டுவிட்டரில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மெர்சல் படத்தை 3 தினங்களில் 17 லட்சம் பேர் டுவிட் செய்துள்ளனர். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. பற்றி விமர்சிக்கப்பட்டது. இதனால் இதுபற்றி அதிக அளவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது. ‘பாகுபலி 2’ படம் மிகவும் பிரமாண்டமாக இருந்ததால் அது பற்றியும் அதிகம் பேசப்பட்டது. அதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் 68 ஆயிரத்திற்கு மேல் ரீடுவிட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஜல்லிக்கட்டு முத்தலாக், ஜி.எஸ்.டி. சாமியார் குர்மித்ராம் கைது, பணமதிப்பு நீக்கத்தின் முதலாண்டு தினம் ஆகிய சம்பவங்கள் குறித்தும் அதிகமாக கலந்துரையாடப்பட்டன.

விளையாட்டை பொறுத்தவரை இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து அதிகமானோர் விவாதித்துள்ளனர். 18 லட்சம் பேர் இதுபற்றி (டுவிட்) செய்துள்ளனர். இதேபோல ஐ.பி.எல். இறுதிப் போட்டியையும் அதிகமானோர் பேசி உள்ளனர்.

டுவிட்டரில் பின் தொடரும் இந்திய தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 3 கோடியே 75 லட்சம் பேர் அவரை பின்பற்றுகிறார்கள். இது 52 சதவீதம் அதிகமாகும்.

அதற்கு அடுத்தப்படியாக அமிதாப்பச்சன் உள்ளார். அவரை 3.15 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். ஷாருக்கான், சல்மான்கான், அக்‌ஷய்குமார், அமீர்கான், தீபிகாபடுகோனே, தெண்டுல்கர், ஹிருத்திக் ரோசன், வீராட்கோலி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற குழந்தையை கொன்று வாஷிங் மிஷினில் மறைத்து வைத்த தாய் கைது..!!
Next post மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’..!! (கட்டுரை)