By 7 December 2017 0 Comments

ஓவியாவால் ஜூலிக்கு கிடைத்த அதிஷ்டம்… உண்மை காரணம் இதுதான்..!!

மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் ‘விஜய் 62’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க ஓவியாவை அணுகினார்கள்.

விஜய்யின் 62ஆவது படமாக உருவாக உள்ள இந்தப்படத்தில் ‘தீரன்’ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் உள்ள முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்டது ஹீரோயின் ரோலுக்காக இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் ஓவியா.சிலர் பொய்யான வதந்திகளை பரப்புவதால் இதுதான் உண்மை காரணம் என கூறியுள்ளார்.

இப்போது ஓவியா நடிக்க மறுத்த கேரக்டரில் ‘பிக்பாஸ்’ ஜூலி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையானால், இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஜூலி.



Post a Comment

Protected by WP Anti Spam