By 9 December 2017 0 Comments

பிறந்து 58 நாட்களே ஆன குழந்தை நரக வேதனையை அனுபவிக்கும் பரிதாபம்..!! (வீடியோ)

நான் கர்ப்பமாக இருந்த போது, ஒவ்வொரு நாளும் உறங்கப் போவதற்கு முன், எனது கையை என் வயிற்றில் வைத்து தடவியபடியே என் குழந்தையிடம் பேசுவேன். சீக்கிரம் வந்து என்னை சந்திக்குமாறு குழந்தையிடம் கூறுவேன். எனக்கு பெண் குழந்தை மீதுதான் ஆசை. என் குடும்பத்தில் ஒரு தேவி வருவாள் என்ற ஆசை இருந்தது. எங்களது வாழ்வுக்குள் அவளை வரவேற்க பொறுமையின்றி காத்திருந்தேன்.

ஏனென்றால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு பலன் தந்தார். ஆனால் பாதி பலன்தான். என் குழந்தை 3.6 வாரங்களுக்கு முன்பே வெளியே வந்தான். குறை பிரசவமாகவும், அதோடு இதயக் குறைபாடோடும் பிறந்தான்.

இது என் வாழ்க்கையின் கடினமான கட்டங்களில் ஒன்றானது. இந்த நேரத்தில், பிறந்த 55 நாட்கள் ஆன எனது மகன் உயிரோடு இருக்க காரணம் அவனது இதயத்துக்குள் ஒரு குழாய் நுழைக்கப்பட்டு, மார்பைச் சுற்றி, மூச்சு விடுவதற்கான குழாய்கள் பொருத்தப்பட்டிருப்பதே. அவனை உயிரோடு வைக்க தற்காலிகமாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு இது. கூடிய விரைவில் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். இதில் அடுத்த சிக்கலான பகுதி, அந்த சிகிச்சைக்கு தேவையான கட்டுப்படியாகாத பணம். இந்த சிகிச்சைக்கான கட்டணம் ரூ. 14 லட்சம். எங்களிடம் இருப்பதை எல்லாம் ஒன்றாக சேர்த்து திரட்டினாலும் அவ்வளவு பணத்தை எங்களால் கட்ட முடியாது.

எனது பெயர் வித்யா மோரே. நான் இல்லத்தரசி. எனது கணவர் மும்பை மாநகராட்சியின் நீர் துறையில் வேலை செய்கிறார். மாதம் ரூ.6000 சம்பாதிக்கிறார். அவரது மொத்த சம்பளமும் மருந்துகளுக்கும், பரிசோதனைகளுக்கும் செலவாகிறது. நாங்கள் என்ன செய்தாலும், உரிய நேரத்துக்குள் தேவைப்படும் பணத்தை திரட்ட முடியாது. சூழ்நிலை கை மீறிச் செல்வதற்கு முன் என் கதையை பகிர நினைத்தேன்.நீங்கள் நன்கொடை அளிப்பதன் மூலம் வித்யாவின் ஆண் குழந்தையைக் காப்பாற்ற உதவி செய்ய முடியும். சிறிய பணமும் அவர்களின் பெரிய மாற்றத்துக்கு உதவும்.

எனது குழந்தை பிறந்தது அக்டோபர் 1, 2017. செப்டம்பர் 30 அன்று நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, எனது குழந்தை பிறக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் குறைப்பிரசவம் என்பதால் NICU எனப்படுகிற பிறந்த குழந்தைக்கான தீவிர சிகிச்சை வசதி இருக்கும் மருத்துவமனைக்கு நான் மாற வேண்டும்.

சில மருத்துவமனைகள் பார்த்துவிட்டு, என் குழந்தை உயிர் காக்கத் தேவைப்படும் வசதிகள் இருக்கும் மருத்துவமனைக்கு கடைசியாக வந்தோம். இது நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு தருணமும், எனது குழந்தையின் ஆரோக்கியத்துக்காக நான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத பிரசவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாலை 6.32 மணிக்கு, 18 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு எனது குழந்தை பிறந்தது.

சரியாக வளர்ச்சியடையாத சுவாசப் பையுடன் பிறந்தான். அவனது நுரையீரல்கள் சரியாக வேலை செய்யவில்லை. வென்டிலேட்டர் உதவியுடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். NICU சிகிச்சைக்குப் பின், PICU எனப்படுகிற குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டான். அவனது இதயத்தில் இணைந்திருக்கும் நரம்புகள் மெல்லிதாக இருந்ததால் உள்ளூர ரத்தக் கசிவு ஏற்ப்பட்டது. இதயம் ஒழுங்காக செயல்பட அந்த மெலிதான நரம்புகளுக்கு பதிலாக செயற்கை குழாக்கள் பதிக்க மருத்துவர்கள் நினைத்தனர்.

எனது குழந்தை எதிர்கொண்ட பிரச்சினைகள் அதி தீவிரமானவை. உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை. எனது குழந்தையின் வாழ்க்கையை விட எதுவும் முக்கியம் கிடையாது. அதனால் சிகிச்சை தொடர என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்தோம். என் குழந்தை மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு நாளும் ரூ.12,000 செலவானது. இதுவரை என் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளோம். இதற்கான எனது தாலி உள்ளிட்ட திருமணத்துக்காக போடப்பட்ட நகைகளை எல்லம் அடகு வைத்து ரூ.1.5 லட்சம் கடன் பெற்றோம்.

எங்கள் வெவ்வேறு நெருங்கிய நண்பர்களிடமிருந்து நான் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளேன். எல்லாப் பணமும் தீர்ந்த பிறகும், மீண்டும் சிகிச்சை தொடர எங்களிடம் எதுவும் மிச்சமில்லை. எனது மகனின் உயிர் இன்னும் ஆபத்தில்தான் இருக்கிறது. என்ன செய்ய வேண்டுமென்றே எனக்குத் தெரியவில்லை

எனது குழந்தை இந்த நரக வலி அனுபவிப்பதைப் பார்க்கும்போது வலிக்கிறது. இந்தத் தருணத்தில் அவனது கையைக் கூட பிடிக்க முடியாமல் போனது இன்னும் மோசமான உணர்வு. நான் எனது குழந்தையை தூக்கியதோ, ஏன் தாய்ப்பால் கொடுத்தது கூட இல்லை. அவன் பாட்டிலில் தாய்ப்பால் குடிக்கிறான். ஏனென்றால் குழந்தையை இப்போது யார் தொட்டாலும் பிரச்சினைதானாம்.

நான் எனது குழந்தையை தாங்கக் காத்திருக்கிறேன். அந்த 4 சுவர்களைத் தாண்டி, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வருவதைக் காண விரும்புகிறேன். அவனது பிரச்சினைகளை எல்லாம் என்னால் வாங்கிக்கொள்ள முடியுமென்றால் அதை நொடியில் செய்வேன். எனது குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும். அவன் நிறைய அனுபவித்துவிட்டான்.

உடம்பிலிருக்கும் இந்த வயர்கள், குழாய்கள் இல்லாமல் அவனைப் பார்த்து, அணைத்துக்கொள்ள வேண்டும். நான் அவனுக்காக இருக்கிறேன் என தெரிவிக்க வேண்டும். அவனது அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணத்தை எனக்கு தந்து உதவுங்கள்.வித்யா அவரது மகனைக் காப்பாற்ற நீங்கள் உதவலாம். இங்கே இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam