எருக்கலப்பிட்டி தாக்குதலையடுத்து மன்னார் கரையோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Read Time:1 Minute, 45 Second

மன்னார் எருக்கலம்பிட்டியிலுள்ள கடற்படைகளின் நிலைகள் மீது விடுதலைப்புலிகள் அணிஒன்று கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தியதையடுத்து அந்தப்பகுதி கரையோர படைநிலைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது எருக்கலம்பிட்டி கடற்படையினரின் நிலைகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து அங்கு கடற்படைதளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட நேரில் சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார்.அந்தப்பகுதியிலுள்ள கரையோர காவலி நிலையங்களுக்கான பாதுகாப்பில் கூடுதலான படையினரை ஈடுபடுத்துவதுடன் கடற்படையினரின் நிலைமைகளையும் பலப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிய வருகிறது. இந்நிலையில் எருக்கலம்பிட்டி கடற்படை நிலைமீது விடுதலைப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர் என்றும் புலிகளின் தாக்குதலுக்கு எதிராக கடற்படையினரின் விசைப்படகுகளும் எம்ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்று படைத்தரப்பை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலாபத்தில் 11 பேர் கைது
Next post வவுனியாவில் புலிகளின் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி