ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை -ஐ.தே.கட்சி பொதுச்செயலாளர்

Read Time:2 Minute, 35 Second

ஆயுதங்களை கீழேவைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூறியிருந்தார் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை அவர்கள் பூண்டோடு ஒழித்துகட்டப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தேசிய பாதுகாப்பு இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது வடக்கு கிழக்கு பகுதிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுத்தம் இன்று அகில இலங்கைக்கும் பரவி உள்ளது யுத்தத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தபீதி ஒருபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மறுபுறம் நாட்டுமக்கள் இந்த இரண்டிலும் சிக்கி தவிக்கின்றனர். கௌரவமான அரசியல் தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்று மஹிந்தசிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது அந்தகொள்கை இன்று காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது. யுத்தம் ஆயுதஇறக்குமதி ஊழல் மோசடி ஆகியவற்றுக்கே இன்று முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சமாதானம் என்ற நிகழ்ச்சி நிரலுக்கே இடம்இல்லாமல் போய்விட்டது மக்களின்பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. எந்தநேரத்தில் என்ன நடக்கும் என்ற பீதியிலேயே மக்கள் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இன்று அதுகுறித்தசிந்தனை இல்லாமல் செயற்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!
Next post கொடநாட்டில் ஜெ-சுவாமி திடீர் சந்தி்ப்பு