ஹாலிவுட் ‘ஷகீலா’ ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

Read Time:3 Minute, 3 Second

்உலகின் மிகவும் பாப்புலரான பலான நடிகை ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. ஜெனீபர் மேரி மஸோலி என்கிற இயற் பெயர் கொண்டவர் ஜென்னா. அமெரிக்காவின் பாப்புலரான பலான பட நடிகை. அவர் நடித்த அத்தனை படங்களுமே பலான படங்கள்தான். நம்ம ஊர் ஷகீலாவுக்கு எப்படி பெருமையும், பெயரும் இருந்ததோ, அதே ரேஞ்சுக்கு அமெரிக்க வாலிப, வயோதிகர்களிடம் நல்ல செல்வாக்குப் பெற்றவர் ஜென்னா. 1993ம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார் ஜென்னா. ஆம்பத்தில் கவர்ச்சிகரான மாடல் அழகியாகவும் இருந்தார் ஜென்னா. இதுவரை 20க்கும் மேற்பட்ட பலான பட விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். நம்ம ஊரில்தான் போர்னோ படங்களுக்கு விருது தருவதில்லை. ஆனால் அமெரிக்காவில் அவர்களுக்கும் அமர்க்களமாக விருது கொடுத்து அசத்துகின்றனர். கடந்த 2000மாவது ஆண்டு கிளப் ஜென்னா இணையதளத்தை தொடங்கினார் ஜென்னா. இதன் பார்ட்னராக இருப்பவர் அவரது கணவர் ஜேய் கிராடினா. இது போர்னோ படங்களுக்கான பிரத்யேக இணையதளமாகும். முதலில் ஜென்னாவைப் பற்றிய படங்கள், செய்திகள் மட்டுமே இதில் இடம் பெற்றன. பின்னர் பிற நடிகைகளும் இடம் பிடித்தனர். 2001ம் ஆண்டு முதல் பலான படத் தயாரிப்பில் குதித்தார் ஜென்னா. அப்படி வெளிவந்த படம்தான் பிரியானா லவ்ஸ் ஜென்னா. இப்படத்திற்கு அமெரிக்காவில் ஏக வரவேற்பு. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு தனது பலான பட நடிப்பனுபவம், சந்தித்த சுவாரஸ்ய அனுபவங்கள் உள்ளிட்டவற்றைத் தொகுத்து How to Make Love Like a Porn Star: A Cautionary Tale என்ற பெயரில் சுயசரிதை ஒன்றை வெளியிட்டார் ஜென்னா. இப்புத்தகத்திற்கு ஏக கிராக்கி. நியூயார்க் புத்தகசந்தையில் தொடர்ந்து 6 வாரங்களுக்கு இது விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. இப்போது அந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஜென்னா. தனது வாழ்க்கையை படமாக்கும் உரிமையை விற்கப் போவதாக கூறியுள்ள ஜென்னா, தனது கேரக்டரில் ஸ்கேர்லட் ஜான்சன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் என்பது பொய்த்தகவல் – அடித்து மறுக்கிறார் தகவல் துறை அமைச்சர்
Next post குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்